பக்கம்:அறிவியல் அகராதி.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mol

273

mon


கூறு வாய்ப்பாடாகும். நீரின் மூலக்கூறு வாய்பாடு H2O. ஒரு மூலக்கூறில் ஒர் உயிர்வளி அணுவும் இரு நீர்வளி அணுக்களும் உள்ளன என்பது பொருள். இவ்வாய்பாடு உணர்த்தும் உண்மைகளாவன சேர்மத்தில் அடங்கியுள்ள தனிமங்களையும் அவற்றின் குறியீடுகளையும் காட்டும். 2. சேர்மத்திலுள்ள தனிமங்களின் தகவைக் காட்டும். 3. சேர்மத்தின் ஒரு மூலக்கூறிலுள்ள தனிமங்களின் எடையைக் காட்டும். 4. சேர்மத்தின் மூலக்கூறு எடையைக் கணக்கிட உதவும். (வேதி)

molecule-மூலக்கூறு: ஒரு தனிமம் அல்லது சேர்மத்தின் மிகச்சிறியதும் அதன் பண்புகளைப் பெற்றதும் தனித்தியங்குவதுமான நிலைத்ததுகள் மூலக்கூறுவாகும். எ.டு. நீர், H2O. (வேதி)

mollusca - மெல்லுடலில்கள்: உடலில் துண்டங்கள் (செக்மெண்ட்ஸ்) இல்லை. 90,000 வகைகள். தசைக்கால், மூடகம் (மேண்டில்) உண்டு. புறக்கூறு ஓட்டாலானது. நிலம், நன்னீர், கடல்நீர் ஆகிய மூன்றிடங்களிலும் வாழ்வது. எ.டு. எண்காலி, சிப்பி, நத்தை. இவற்றைக் கொல்லும் மருந்து மெல்லுடலிக் கொல்லி (மொலசைடு). (உயி)

molybdenum - மாலிப்டினம்: Mo. கடின வெண்ணிற உலோகம். இயற்கையில் மாலிப்டினைட்டு, உல்பனைட்டு என்னும் தாதுவாகக் கிடைத்தல். உலோகக்கலவைகள் செய்யவும் மின்விளக்கு இழைகள் செய்யவும் பயன்படுதல். (வேதி)

moment of a force - விசையின் திருப்புத்திறன்: ஓர் அச்சில் ஒரு விசை உண்டாக்கும் திருப்பு விளைவின் அளவு. அச்சில் விசை செயற்படும் கோட்டிலிருந்து உள்ள செங்குத்துத் தொலைவையும் விசையையும் பெருக்கி வரும் தொகை திருப்புத்திறனின் எண் மதிப்பு ஆகும். எவ்வச்சிலும் அதன் மேலுள்ள விசைகளின் எல்லாத் திருப்புத்திறன்களின் குறிக்கணக்குக் கூட்டுத்தொகை சுழியாக இருக்குமானால், ஒரு பொருள் சுழல் நடுநிலையில் இருக்கும். (இய)

momentum - உந்தம்:ஒரு பொருளின் இயக்க அளவு. அதன் நிறையையும் நேர்விரைவையும் பெருக்கி வரும் தொகைக்குச் சமம் P= m x w (p- உந்தம் m-நிறை w- நேர்விரைவு (இய)

momentum, conservation of - உந்தம் மாறாக் கொள்கை: இரு பொருள்கள் ஒன்றுடன் மற்றொன்று மோதும்போது, மோதலுக்குப் பின் மொத்த உந்தமானது மோதலுக்கு முன்னிருந்த மொத்த உந்தத்திற்குச் சமம். (இய)

monadelphous stamens - ஒற்றை முடி மகரந்தம்: (உயி)

monandrous - ஒற்றை மகரந்தமுள்ள: ஒரு மகரந்தத்தாள் அல்லது ஆணியத்தைக் கொண்ட

அஅ 18