பக்கம்:அறிவியல் அகராதி.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mon

275

mor


அல்லது தொகுதி. இதிலிருந்து இருபடி (டைமர்), முப்படி (ட்ரைமர்), பல்படி (பாலிமர்) ஆகியவை உருவாகின்றன. (இய)

monophylitic - ஒற்றை மரபு வழி: ஒரு தனிக்கால்வழித் தோற்றம் (உயி)

monoplane - ஒற்றை ஊர்தி: ஒரு தொகுதி சிறகுகளைக் கொண்ட ஊர்தி (இய)

monoploid - ஒரு மய: பா. haploid (உயி)

monopodial branching -ஒற்றைக்கால் கிளைப்பு: முதல் அச்சிலிருந்து உண்டாகும் இரண்டாந்தண்டுகளைக் கொண்ட வளர்ச்சி. நுனி மொட்டுக்கிளைப்பு. ஒ. symbodial.

monosaccharide- ஒற்றைச் சர்க்கரைடு: தனிச் சர்க்கரை. மேலும் நீராற் பகுக்க முடியாதது. எ-டு. பிரக்டோஸ், குளுகோஸ், பா. (உயி)

monotrichous-ஒற்றைநீள் இழையன்கள்: ஒரு முனையில் ஒரு கசை இழை மட்டும் கொண்ட உயிரிகள்-குச்சியங்கள் (பாக்டீரியா)(உயி)

monotropy-ஒற்றை வேற்றுமை: ஒரு தனிமத்தின் ஒற்றை வேற்றுரு மட்டும் தனித்திருத்தல், வெப்ப நிலைக்குச் சார்பில்லாமல் எப்பொழுதும் நிலைத்திருப்பது பாகவரம், பா. allotropy (வேதி)

monovalent - ஓரிணைதிறன்: இணைதிறன் ஒன்று கொண்டவை. எ.டு. வெள்ளி, வேதி,

monoxide - ஓராக்சைடு: ஒரு மூலக்கூறில் ஓர் உயிர்வளி அணுவுள்ள ஆக்சைடு. எ.டு. கரி ஓராக்சைடு (வேதி)

moon- திங்கள்: புவியின் இயற்கை நிலா அல்லது துணைக்கோள். இதில் காற்று இல்லாததால் உயிர் வாழ இயலாது. நெயில் ஆம்ஸ்ட்ராங் திங்களில் காலடி வைத்த முதல் மனிதன். லூனா, அப்பல்லோ முதலிய செயற்கை நிலாக்களால் திங்கள் நன்கு ஆராயப் பெற்றுள்ளது. பா. space Science (வானி)

moon, motions of-திங்கள் இயக்கங்கள்: திங்கள் தன் அச்சில் சழன்று கொண்டு புவியைச் சுற்றி வருகிறது. தன்னைத்தானே சுற்றி வர 24 மணி 5 நிமிடம் புவியை ஒரு முறை சுற்றிவர 27 நாட்கள் 8 மணியும் ஆகின்றன. (வானி)

moped- விசை மிதிவண்டி: பளுக்குறை உந்து மிதிவண்டி (இய,)

mordant - நிறம் நிறுத்தி: சாயந்தோய்க்கப் பயன்படும் கனிமப் பொருள். எ-டு. அலுமினியம் அய்டிராக்சைடு (வேதி)

morphine-மார்பைன்(C17H1803N): அபினில் முதன்மையாகவுள்ள காரமம். மார்பைன் ஹைடிரோ குளோரைடு, வலிநீக்கி. (வேதி)

morphology-உருவியல்: ஓர் உயிரியின் உருவத்தை ஆராயுந்துறை. புறஉருவியல், அகஉருவியல் என இருவகைப்படும். (உயி)