பக்கம்:அறிவியல் அகராதி.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mul

278

mus


கல்வி, பொழுதுபோக்கு முதலியவற்றில் பயன்படுபவை.

multiple alleles - பன்ம இணை மாற்றுகள்: குறிப்பிட்ட இடத்திலுள்ள மூன்றிற்கு மேற்பட்ட மரபணு வகைகள். அதாவது, ஒரு மரபணுவிற்கு மூன்றிற்கு மேற்பட்ட இணைமாற்று வரிசை இருத்தல், பா. alleles (உயி)

multiple bond-பன்மப்பிணைப்பு: பலநிலைப் பிணைப்பு. ஓரிணை மின்னணுக்களுக்கு மேலுள்ள இரு அணுக்களுக்கிடையே ஏற்படும் பிணைப்பு. எ.டு. இரு பிணைப்பு, முப்பிணைப்பு (வேதி)

multiple fission - பன்மப் பிளவு: கண்ணறைக் கணியம் (சைட்டோ பிளாசம்) பிளவுபடுவதற்கு முன், உட்கருவில் நடைபெறும் பல இழைப்பிரிவு மாற்றங்கள் கொண்ட கலவி இலா இனப்பெருக்கம். அதாவது, ஒரு கண்ணறை உயிரி பால்படா முறையில் பலமுறைகள் பிளவுபட்டுப் பல இளவுயிரிகள் தோன்றுதல் (உயி)

multiple fruit -கூட்டுக்கனி: பா.fruit (உயி)

multiple parasitism - கூட்டு ஒட்டுண்ணி வாழ்வு: ஒரே ஓம் புயிரில் ஒன்றிற்கு மேற்பட்ட ஒட்டுண்ணிகள் வாழ்தல். (உயி)

multiple resistance -கூட்டு நிலைத்தடை: நோய், வறட்சி, பூச்சி முதலிய நெருக்கடிகளுக்கு உயிரி உண்டாக்கும் தடை (உயி)

mumetal - மியுமெட்டல்: காந்த

ஊடுருவும் தன்மை அதிகங் கொண்ட உலோகக் கலவை. 78% நிக்கல் மற்றும் இரும்பு, செம்பு, மாங்கனீஸ் ஆகியவற்றைக் கொண்டது. மாற்றிகளின் உள்ள கங்களில் பயன்படுவது. (வேதி)

mumps தட்டம்மை, தாளம்மை: காதுமுன் உமிழ்நீர்ச்சுரப்பிகள் (பராடிட் கிளாண்டஸ்) வீங்குவதால் உண்டாகும் நோய் நிலைமை. பண்டுவம் உண்டு. (உயி)

muntz metal - முன்ஸ் உலோகம்: மூன்று பங்கு செம்பும் இரண்டு பங்கு துத்தநாகமும் சேர்ந்த உலோகக் கலவை, ஆல்பா பித்தளையை விட வலுவானது. திருகுகள், மரைகள் செய்யப் பயன்படுதல், முன்ஸ் (1794 - 1857) என்பவர் பெயரால் அமைந்தது. (வேதி)

muscle - தசை: எலும்புகள் ஒன்றுடன் மற்றொன்று இயங்குவதற்குக் காரணமான இணைப்புத் திசு. உடலின் திட்டமான வடிவத்திற்கும் உடல் இயங்கவும் மூலகாரணமானது. தசையும் எலும்பும் சேர்ந்தே உடலுக்கு இயக்கமளித்தல். இது வரித்தசை (எலும்புத்தசை இயக்கதசை) வரியிலாத்தசை (எலும்பிலாத் தசை, இயங்கு தசை என இருவகைப்படும். முன்னதற்கு இருதலை, முத்தலைத் தசையும், பின்னதற்கு உள்ளுறுப்புத் தசைகளும் எடுத் துக்காட்டுகள். சுருக்குத் தசைகள்: இவை ஒருவகை இயங்கு தசைகளே. இவற்றில் தசைநார்-