பக்கம்:அறிவியல் அகராதி.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

myc

280

myo


வகையிலிருந்து மரபுவழியில் உடன்வேறுபடுதல். டச்சு தாவர வியலார் டீ வைரைஸ் ஹியூகோ (1848 -1935) 1901இல் சடுதி மாற்றக் கொள்கையினை முன்மொழிந்தார். இம்மாற்றம் மரபணுக்களில் ஏற்படுவது கால்வழிப் பண்புடயது. இதனால் திட்டவட்டமான பண்புகள் உயிரிகளில் உண்டாதல். காட்டாக, இயல்பான புகையிலைச் செடியில் 20 இலைகளும் மாற்றம் பெற்ற செடியில் 70 இலைகளும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. டிரோசோ பைலா என்னும் கனி ஈயில் மட்டும் 1000 மாற்றங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இம்மாற் றம் நான்கு வகைப்படும். 1.நிறப்புரி மாற்றம் 2.மரபணு மாற்றம் 3.தான் தோன்று மாற்றம் 4.தூண்டு மாற்றம் (உயி)

mycelium - பூஞ்சிழை: பூஞ்சிழையின் தண்டகத்தை (தேலஸ்) உண்டாக்கும் வெண்ணிற நுண் பூஞ்சிழைகள் தொகுதி பா. hypha (உயி)

mycology -பூஞ்சை இயல்: பூஞ்சைகளை ஆராயுந்துறை. (உயி)

mycophyta-பூஞ்சிழைத் தாவரங்கள்: அணுவுறை உள்ள எளிய பூஞ்சைத் தொகுதி, பச்சையம் இல்லை. உடலம் ஓரணுவாலானது. அல்லது குழாய் இழைகள் இருக்கும். நுண் பூஞ்சிழை, கலவி மூலமும் கலவி இல்லாமலும் (சிதல்கள்) இனப்பெருக்கம் செய்யவல்லது. (உயி)

mycorrhiza - பூஞ்சையவேரி: பூஞ்சையின் நுண் இழைக்கும் உயர் தாவர வேர்களுக்கும் இடையே உள்ள இயைபு இருவகை வேரிகள் உள்ளன. 1.புற ஊட்ட வேரிகள்: இதில் மரங்களிலுள்ள சிறிய வேர்களால் பூஞ்சை ஒரு வலைப்பின்னலை உண்டாக்கும். எ டு மரங்கள்.2.அகஊட்டவேரிகள்: இதில் வேர்களின் புறணிக் கண்ணறைகளில் பூஞ்சை வளரும். எ.டு. ஆர்க்கிட்டுகள். (உயி)

mycosis - பூஞ்சையழற்சி: பூஞ்சையினால் ஏற்படும் நோய். (உயி)

mylocyte - பித்தனு: எலும்பிலுள்ள செஞ்சோற்றின் பித்துத் திசுவிலுள்ள சோற்றணு. இவ்வணுக்கள் துணுக்கணுக்களாக மாறிக் குருதி யோட்டத்தோடு சேர்பவை. பித்து சோறு, பா. granulocyte. (உயி)

myloid tissue -பித்துத்திசு:வெள்ளணுக்களை உண்டாக்கும் திசு குருதிக் குழாய்களைச் சூழ்ந்துள்ள எலும்பின் செஞ்சோற்றில் தோன்றுவது. (உயி)

myelin - பித்தியன்: நரம்பிழைகளின் உறை. புரதம் சேர்ந்த கொழுப்பாலானது. (உயி)

myelin sheath - பித்திய உறை: நரம்பிழையைச் சூழ்ந்துள்ள அடுக்கில்லாக் கொழுப்பு (உயி)

myocardial infarction - இதயத்தசை நசிவு: குருதி வழங்கல், இதயத்தசை உறைப்பகுதிக்குக் கடுமையாகக் குறைதல், தமனி