பக்கம்:அறிவியல் அகராதி.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nas

283

nat



நீர்வளி (நீரகம்). நீரை மின்னாற் பகுத்து அல்லது உலோகங்களுடன் காடிகளைச் சேர்த்துப் பெறலாம். அதிக அளவு உள்ளாற்றல் பெற்றது. ஆண்டிமனி, சவ்வீரம், பாசுவரம் ஆகியவற்றின் அய்டிரைடுகளை உண்டாக்கப் பயன்படுதல். (வேதி)

nastic movements, nasties - தூண்டல் இயக்கங்கள்: தாவரத் திசைச்சாரா அசைவுகள். இது ஒளி இயக்கம், வெப்ப இயக்கம் எனப் பலவகை.

natural balance - இயற்கைச் சமநிலை: எலிகள் அதிகமாகும் பொழுது அவை பாம்புகளாலும், மான்கள் அதிகமாகும் பொழுது அவை சிங்கம் புலிகளாலும், உணவாகக் கொள்ளப்படுவதால், அதிகம் பெருகா வண்ணம் கட்டுப்படுத்தப்படுகின்றன. இது போன்று உயிர்களிடையே ஒத்தநிலை ஏற்படுவதற்கு இயற்கைச் சமநிலை என்று பெயர். (உயி)

natural classification - இயற்கைச வகைப்பாடு: ஏற்றுக்கொள்ளப்பட்ட வகைப்பாடு. தாவர உலகைச் சார்ந்தது. புவிஇயல், உருவியல், தாவரவேதிஇயல், நுண் உள்ளியல், உயிரணு மரபணுவியல் முதலிய துறைகளில் செய்த ஆய்வுகள் அடிப்படையில் வகுத்த வகைப்பாடு (உயி)

natural gas - இயற்கைவளி: வளிநிலை அய்டிரோகார்பன்கள் சேர்ந்த கலவை. படிவப்பாறைகளில் காணப்படுவது. பெட்ரோலியப் படிவுகளுடன் கலந்திருப்பது. முதன்மையாக மீத்தேன், ஈத்தேன், புரோபேன், பூட்டேன் ஆகிய வளிகளைக் கொண்டது. எரிபொருளாகவும் கரிக்கருமை செய்யவும் பயன்படுதல். (வேதி)

natural glass - இயற்கைக் கண்ணாடி: பளிங்கு போன்ற கணிப்பொருள். எரிமலைக் குழம்பிலிருந்து விரைவாகக் குளிர்ந்து படிகமாவது. (வேதி)

natural radio activity - இயற்கைக் கதிரியக்கம்: இயற்கை கதிரியக்கப் பொருள்களால் வெளிப்படுத்தப்படும் கதிரியக்கம். எ-டு. ரேடியம். (வேதி)

natural sciences - இயற்கை அறிவியல்கள்: எல்லா அறிவியல்களையும் உள்ளடக்கிய அறிவுத் துறை, அளந்தறியக் கூடிய நிகழ்ச்சிகள் அல்லது ஏற்பாடுகள் பற்றி ஆராய்பவை. இவை தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வேதியியல், கணக்கு ஆகிய அடிப்படை அறிவியல்களில் நிகழ்பவை. தந்தை அறிவியல் மெய்யறிவியல். தாய் அறிவியல் கணக்கு (ப.து)

natural selection - இயற்கை தேர்வு: வாழ்க்கைப் போராட்டம் என்று தார்வின் (1809-1882) கூறிய முறை. இதற்கேற்பத் தம் சூழ்நிலைக்குக் குறைந்த தகைவுள்ள உயிரிகள் அழியும். நிறைந்த தகைவுள்ளவை வாழும். தார்வின் கொள்கைப்படி வேறு