பக்கம்:அறிவியல் அகராதி.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

neo

286

ner



எடுத்துக்காட்டுகள். (உயி)

neotype - புதுவகை: மூலப்பொருள் அழிந்தாலோ இழக்கப்பட்டாலோ மாதிரிவகையாகப் பயன்படுமாறு வடிவமைக்கப்படும் மாதிரி. (உயி)

nephelometer - நிற ஒளி அளவுமானி: தொங்கல் கரைசல்களின் செறிவினை, ஒளிச்சிதறல் மூலம் அளக்குங்கருவி. அளக்கும் செயல் நிற ஒளி அளவியல் (நெப்லோமெட்ரி) (இய)

nephralgia - சிறுநீரக வலி: சிறு நீரகத்தில் ஏற்படும் இடர். (மரு)

nephridium - சிறுநீரகம்: பல முதுகெலும்பிகளின் குழாய் வடிவக் கழிவுறுப்பு. சிறுநீரைப் பிரித்தல் வேலையாகும். (உயி)

nephritis - சிறுநீரக அழற்சி: சிறுநீரக வீக்கம். (உயி)

nephron - சிறுநீர்ப்பிரித்தி: சிறு நீரகத்தின் அமைப்பலகும் வேலை அலகுமாகும். குழல், முடிச்சு ஆகிய இரு பகுதிகளாலானது. மனிதச் சிறுநீரகங்கள் ஒவ்வொன்றிலும் பத்து இலக்கப் பிரித்திகள் உள்ளன. ஒன்றின் குறுக்களவு 200 μm (உயி)

Neptune - நெப்டியூன்: கதிரவன் குடும்பத்தில் 8ஆவது வரிசையிலுள்ள கோள். 1846இல் கேல் என்பார் கண்டுபிடித்தது. இரு நிலாக்கள் உண்டு. (வானி)

neptunium - நெப்டூனியம்: Np. நச்சுத் தன்மையுள்ள தனிமம். யுரேனியத்தைக் காட்டிலும் அதிக அணு எண் கொண்டது. 1940இல் முதன்முதலில் தொகுக்கப்பட்டது. யுரேனியத் தாதுக்களில் சிறிதளவு உள்ளது. புளுட்டோனியம் 239 உற்பத்தியில் துணை வினைப் பொருளாகக்கிடைப்பது. (வேதி)

nerve - நரம்பு: 1. அச்சியன் (ஆக்சான்) திரள். ஓரலகாக இணைந்திருப்பது. 2 மையநரம்பு மண்டலத்திற்கு வெளியே அமைந்துள்ள நரம்பிழைத்திரள். 3. இலை நரம்பு: நரம்பிழை என்பது நரம்பனின் (நியூரான்) அச்சியன் (ஆக்சான்) ஆகும். (உயி)

nerve cell - நரம்பணு: நரம்பன். பா. neuron. (உயி)

nerve cord - நரம்பு வடம்: தண்டு வடம். பா. spinal cord (உயி)

nerve fibre - நரம்பிழை: நரம்பனின் அச்சிழை. பா. neuron (உயி)

nerve impulse - நரம்புத்துடிப்பு: நர்பணுக்கள் வழியாகச் செல்லும் குறிபாடு. எல்லா நரம்புத்துடிப்புகளும் வடிவத்திலும் வலுவிலும் ஒத்தநிலை உள்ளவை. (உயி)

nervous system - நரம்பு மண்டலம்: மூளையும் அதன் பகுதிகளும் அதனோடு தொடர் புடைய நரம்புகளும் அடங்கிய தொகுதி, உடலின் வேலைகள் யாவற்றையும் ஒருமுகப்படுத்திக் கட்டப்படுத்துவது. இதனைத் தொலைவரிக் கம்பி மண்டலத்திற்கு ஒப்பிடலாம். உடலிலுள்ள