பக்கம்:அறிவியல் அகராதி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ann

27

ano


வேறுபட்ட இயற்பண்புகளைக் கொண்ட நிலை. ஒ. isotropic. (வேதி)

annealing - கட்டுப்படுத்தி ஆற்றுதல்: வெப்பப் பதப்படுத்தும் முறைகளில் ஒன்று. எஃகினைச் செஞ்சூடேற்றிப் பின்னர்க்குளிரச் செய்ய அது மென்மையாகும். (வேதி)

annelida - வளைய உடலிகள்: வளை தசைப் புழுக்கள். உடல் வளையங்களாலானவை. 14,000 வகைகள். திட்டமான உடற்குழி, உணவுக்குழி அமைந்திருக்கும். மண்புழு, அட்டை. (உயி)

annihilation - அழிந்தொழிதல்: ஒரு துகளும் அதன் எதிர் மின்னேற்றத்துகளும் ஒன்றுடன் மற்றொன்று மோதும் பொழுது சிதைதல். இதனால் உண்டாகும் அழிந்தொழிதல் கதிர்வீச்சை, ஒளியன்கள் அல்லது நடுவன்கள் எடுத்துச் செல்பவை. (இய)

annual - ஒரு பருவத் தாவரம்: தன் வாழ்க்கைச் சுற்றை ஓராண்டில் நிறைவு செய்யும் தாவரம். சூரியகாந்தி. ஒ. blennial, perennial (உயி)

annual ring - ஆண்டு வளையம்: ஒராண்டில் ஒரு தாவரத்தின் மரக்கட்டையில் சேரும் இரண்டாம் நிலைத் திசுவின் பெருக்கம். குறுக்கு வெட்டுப் பகுதியில் ஒன்றிற்கு மேற்பட்ட வளையங்கள் தெரியும். இவ்வளையம் மரத்தின் வயதை உறுதி செய்யப் பயன்படுவது. (உயி)

annular thickening - வளையத்தடிப்பு: வளைய வளர்ச்சி. முன் மரக்குழாய்கள் நுண்கடத்திகள் ஆகியவற்றின் உட்சுவரில் ஏற்படுவது. பா. xylem. (உயி)

annulus - வளையத் திசு: 1. பெசிடியோமைசிட் பூஞ்சையின் முதிர்ந்த வித்துறுப்பின் காம்பைச் சுற்றியுள்ள வளையத்தாலான திசு. 2. பெரணிச் சிதலகத்தில் காணப்படும் தனிவில் அல்லது கண்ணறை வளையம். இதுவே சிதல்கள் பரவக் காரணம். 3. பியுனேரியா முதலிய மாசிகளில் செவுள் முடியிலிருந்து புறத்தோலைப் பிரிக்கும் கண்ணறை வளையம் 4. கண்டம்: மண்புழுவிலுள்ள வளைய உறுப்பு.

anode - நேர்மின்வாய்: எதிரயனிகளைக் கவரும் முனை. ஒ cathode (இய)

anodizing - நேர்முனை ஏற்றம் செய்தல்: அலுமினியம் அல்லது அலுமினிய உலோகக் கலவையில் அலுமினிய ஆக்சைடை மெல்லியதாகப் படிய வைத்தலுக்கு நேர்முனை ஏற்றஞ் செய்தல் என்று பெயர். இச்செயலுக்குட்பட்ட உலோகம் மின்சாரத்தைக் கடத்தாது. அரிமானத்தை எதிர்க்கும் வலிமை கொண்டது. (வேதி)

anomalous expansion - முரண்படு பெருக்கம்: குறைந்த வெப்பநிலையினால் பருமன் உயர்தல். தன் வெப்பநிலை உயரும் பொழுது பெரும்பான்மை நீர் தங்கள் பருமனில் அதிகமாதல், வெப்ப