பக்கம்:அறிவியல் அகராதி.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

new

288

New


newton - நியூட்டன்: N. அலகு சொல் 1 கிலோகிராம் பொருண்மையுள்ள பொருளின் மீது, செயற்பட்டு அதில் ஒரு மீட்டர் வினாடி முடுக்கத்தை உண்டாக்கும் விசை. எம்.கே.எஸ் முறையில் விசையின் சார்பிலா அலகு. மதிப்பு மாறாதது. (இய)

new physics - புதிய இயற்பியல்: விண்ணகம், விண்வெளி நிகழ்ச்சிகள், விண்ணகவானியல், ஏவுகணைகள், செயற்கை நிலாக்கள் முதலியவை பற்றி ஆராயும் புதிய துறை. (இய)

Newton's law of cooling - நியூட்டன் குளிர்தல் விதி: ஒரு பொருளின் வெப்ப இழப்பு அளவு, அப்பொருளுக்கும் அதன் சூழ்நிலைக்குமிடையே உள்ள வெப்பநிலை வேறுபாட்டிற்கு நேர்வீதத்திலிருக்கும். அது பொருளின் இயல்பைப் பொறுத்ததன்று. (இய)

Newton's law of gravitation - நியூட்டன் ஈர்ப்பாற்றல் விதி: பருப்பொருள் ஒன்றின் ஒவ்வொரு பகுதியும் விண்ணகத்திலுள்ள பொருள் ஒன்றின் மற்றொரு பகுதியை ஈர்க்கும் விசை அதன் பொருண்மைக்கு நேர் வீதத்திலும், தொலைவின் வர்க்க மூலத்திற்கு எதிர்வீதத்திலும் இருக்கும். (இய)

Newton's laws of motion - நியூட்டன் இயக்கவிதிகள்: ஐசக்கு நியூட்டனின் (1642 - 1727) புகழ்பெற்ற இயக்கவிதிகளாவன: 1. ஒரு நேர்க்கோட்டில் ஒரு பொருள் தன் சீரான இயக்கத்திலோ அசைவற்ற நிலையிலோ தொடர்ந்திருக்கும். புற விசையினால் அந்நிலை மாற்றப்படாத வரை அது தொடர்ந்திருக்கும். 2. உந்தத்தின் மாறுமளவு அதன் மீது உண்டாகிய விசைக்கு நேர் வீதத்திலமைந்து விசைத்திசை நோக்கியே இருக்கும். 3. ஒவ்வொரு வினைக்கும் சமமானதும் எதிரானதுமான ஒரு வினை உண்டு. (இய)

new elements 104-109; 110 - 112:- புதிய தனிமங்கள் 104 109 110-112: கடந்த இருபது ஆண்டுகளில் இவை கண்டறியப் பட்டவை அல்லது உருவாக்கப்பட்டவை. உருவாக்கிய கருவி முடுக்கி, ஆய்வகம் உருவாக்கிய நாடுகள் அமெரிக்கா, உருசியா, ஜெர்மனி. இவற்றில் 110-112 என்பவை இன்னும் பெயரிடப்படவில்லை. 104-109 ஆகியவற்றின் பெயர்களாவன: 1. 104 ரூதர்போர்டியம் Rf. 2. 105 டப்னியம் Db, 3. 106 போர்கியம் Sg, 4. 107 போரியம் Bh, 5. 108 ஹேசியம் Hs, 6. 109 மெல்டர்னியம் Mt.

Newton’s rings - நியூட்டன் வளையங்கள்: மறிக்கும் பரப்பில் அதிக வளைவு ஆரங்கொண்ட வில்லையை வைத்து, மேலிருந்து ஒற்றைய நிற ஒளியால் ஒளிபெறச் செய்து உண்டாக்கப்படும் குறுக்கீட்டுக் கோலங்கள். இந்த ஏற்பாட்டை மேலிருந்து நுண்-