பக்கம்:அறிவியல் அகராதி.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

neu

289

nic


ணோக்கியால் பார்க்கத் தொடு புள்ளிக்குப் பொது மையமாக ஒளிர்வான வளையங்களும் கறுப்பு வளையங்களும், மையத்தில் கறுப்புப் புள்ளியும் தெரியும். (இய)

neutron - அல்லணு: பா. atom. (இய)

neutron number - அல்லணு எண்: பருப்பொருள் அணுக்கருவிலுள்ள அல்லணுக்களின் எண்ணிக்கை, (இய)

neutron star - அல்லணு விண்மீன்: தன் படிநிலை வளர்ச்சி முடிந்த விண்மீன். அதன் அணுக்கரு எரிபொருள் தீர்ந்த நிலை. (வானி)

NGO, non-government organization - என்ஜிஒ., அரசு சாரா அமைப்பு- எயிட்ஸ் ஒழிப்பு முதலிய சமூகப்பணிகளில் ஈடுபடுவது.

niche - வாழ்நிலைமை: தான் வாழும் கூட்டத்தில் ஒரு விலங்கு அல்லது தாவரத்தின் நிலையும் ஏனைய உறுப்பினிகளோடு அதன் உயிர்த் தொடர்பும் நாட்டத் தொடர்பும் வாழ் நிலைமையாகும். (உயி)

nichrome - நிக்ரோம்: நிக்கல், குரோமியம், இரும்பு சேர்ந்த உலோகக்கலவை. உயர்ந்த உருகு நிலையும் தடைத்திறனும் கொண்டது. மின்தடைகள் செய்ய. (வேதி)

nickel - நிக்கல்: Ni. வெள்ளி போன்ற வெண்ணிறக் காந்த உலோகம். தகடாக்கலாம். கம்பியாக்கலாம். காற்று, ஈரம் பாதிக்கா. மின்முலாம் பூசுவதிலும் கறுக்கா எஃகு செய்வதிலும் பயன்படல். (வேதி)

nickel acetate - நிக்கல் அசெடேட்டு: கரையக்கூடிய பசுமை நிறப்படிகம். நிக்கல் முலாம் பூச. (வேதி)

nickel carbonate - நிக்கல் கார்பனேட்டு: NiCO3, 6H2O. பசுமையான படிகம். நிக்கல் உப்புக்கரைசலில் சோடியம் இருகார்பனேட்டு கரைசலைச் சேர்த்துப் பெறலாம். நீரில் கரையாது. காடிகளில் கரையும். மின்முலாம் பூசவும் பீங்கான் தொழிலிலும் பயன்படல். (வேதி)

nickel plating - நிக்கல் முலாம் பூசுதல்: மின்னாற் பகுப்பு முறையில் ஒர் உலோகத்தின் மீது நிக்கல் உலோகத்தைப் படியச் செய்தல். (வேதி)

nickel silver - நிக்கல் வெள்ளி: ஜெர்மன் வெள்ளி, செம்பு நிக்கல் துத்தநாகம் சேர்ந்த கலவை. வெள்ளி முலாம் பூசுதலிலும் குரோமிய முலாம் பூசுதலிலும் பயன்படல். (வேதி)

nickel sulphate - நிக்கல் சல்பேட்டு: NiSO4 7H2O. பசும்படிகங்கள். நீர்த்த கந்தகக்காடியில் நிக்கல் கார்பனேட்டைக் கரைத்துப் பெறலாம். பீங்கான் தொழிலிலும் வண்ணத் தொழிலிலும், மெருகேற்றிகளிலும் பயன்படுதல்.

அஅ 19