பக்கம்:அறிவியல் அகராதி.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nod

293

nos



nodule - வேர்முண்டு: அவரைக் குடும்பத் தாவரங்களில் வேர் முண்டுகள் உண்டு. இவற்றில் குச்சியங்கள் வாழ்ந்து நைட்ரஜன் கூட்டுப் பொருளை உண்டாக்குகின்றன. தங்களுக்கு வேண்டிய மாப்பொருளைத் தாவரத்திலிருந்து பெறுகின்றன. எ-டு. ரைசாபியம் என்னும் குச்சியம். (உயி)

noise - ஓசை: ஒழுங்கற்றதும் சீரற்றதுமான அதிர்வுகளால் உண்டாவது, இதனை இரைச்சல் என்றுங் கூறலாம். (இய)

nomad - நாடோடி: தான் தோன்றுமிடத்திலிருந்து இடம் பெயரும் உயிரணு ஒரு திரிவி. எ-டு விழுங்கணுக்கள். (உயி)

non-aqueous solution - நீரற்றகரைசல்: கரைப்பான் நீராக இல்லாத கரைசல். இக்கரைப்பான் கனிமமாகவோ, கரிமமாகவோ முன்னணு சார்ந்ததாகவோ சாராததாகவோ இருக்கும். (வேதி)

non-linear material - நீளச் சார்பிலாப் பொருள்: நீளச் சார்பு நிகழ்ச்சி இல்லாத பொருள். எ-டு அரைக்கடத்திகள், கரிமத் திண்மங்கள்.

non-metllic elements - அலோகத் தனிமங்கள்: மின் எதிர்த் தனிமங்கள். இவற்றின் ஆக்சைடுகள் காடியைக் கொடுக்கும். இவை திண்மம் (கரி) நீர்மம் (புரோமின்) வளி (நைட்ரஜன்) என்னும் நிலகளில் இருக்கும். (வேதி)

non-polar compound - முனைபடாச் சேர்மம்: இருமுனைத் திருப்புத் திறன் இல்லாத சேர்மம். எ-டு. பென்சீன், கார்பன் நாற்குளோரைடு. (வேதி)

non-volatile oils - ஆவியாகா எண்ணெய்கள்: இவை ஆவியாகாதவை. தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் முதலியவை. ஒ. volatile oils. (உயி)

normality - இயல்மை: ஒரு லிட்டர் கரைசலில் உள்ள கிராம் சமான எடைகளின் எண்ணிக்கை. நார்மாலிட்டி = ஒரு லிட்டர் கரைசலில் கரை பொருள் எடை/கரைபொருளின் கிராம் சமான எடை (வேதி)

normal solution - இயல்புக்கரைசல்: ஒரு கிராம் சமான எடையுள்ள கரைபொருள் 1 லிட்டர் கரைப்பானில் கரைந் திருத்தல், (வேதி)

normal spectrum - இயல்புநிறமாலை: அலைநீள வேறுபாட்டிற் கேற்பக் கோணங்களில் பிரிக்கப் பட்ட நிறவரிகளைக் கொண்ட நிறமாலை. (இய)

nose - மூக்கு: முகத்தின் நீட்சி. மணமறியவும் மூச்சுவிடவும் பேசவும் பயன்படும் உறுப்பு. (உயி)

nostrils, nares - மூக்கத் துளைகள்: மூக்கக் குழியிலுள்ள இரு திறப்புகள். மனிதனுக்கு 2 உள் மூக்கத் துளைகளும் 2 வெளி