பக்கம்:அறிவியல் அகராதி.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nuc

295

nuc



ஏற்படும் மாற்றத்தால் உண்டாகும் விளைவு (இய)

nuclear reactor - அணுக்கரு உலை: அணு உலை. அணுக்கருப் பிளவு அல்லது தொடர்வினை நடைபெறும் கருவியமைப்பு. (இய)

nuclear weapon - அணுக்கருக் கருவி: போர்க்கருவி. (இய)

nucleic acids - உட்கருக்காடிகள்: கரிம அமிலங்கள். அவற்றின் மூலக்கூறுகளில் சர்க்கரை அலகுகளும் பாஸ்பேட் அலகுகளும் மாறிமாறி அமைந்திருக்கும். நைட்ரச காரங்கள் சர்க்கரை அலகுகளோடு சேர்ந்திருக்கும். எல்லா உயிரணுக்களிலும் உள்ளன. டிஎன்ஏவில் காணப்படும் சர்க்கரை டிஆக்சிரிபோஸ், ஆர்என்ஏவில் ரிபோஸ், பா. RNA DNA. (உயி)

nucleolus - நுண் (உட்)கரு: உட்கருவில் உள்ள கோளவடிவப் பொருள். ஆர்என்ஏ அடங்கியது. நிறப்புரி வழிப்பொருள். (உயி)

nucleons - உட்கருவன்கள்: முன்னணுக்களுக்கும் அல்லணுக்களுக்கும் பொதுவாக வழங்கும் பெயர். எல்லா அணுக்கருக்களிலும் உள்ளவை. (இய)

nucleon number - உட்கருவன் எண்: ஒர் அணுவின் உட்கருவிலுள்ள கருவன்களின் எண்ணிக்கை. (இய)

nucleoplasm - உட்கருக்கணியம்: நிறமியனைத் (குரோமேட்டின்) தவிர்த்த உட்கருவின் பொருள். டிஎன்ஏ பெருக்கத்திற்கும் ஆர்என்ஏ தொகுப்பிற்கும் தேவையான நொதிகளையும் கலவைகளையும் கொண்டது. (உயி)

nucleoprotein - உட்கருப்புரதம்: இது ஒர் அரிய கூட்டுப்பொருள். உட்கருவுள்ள புரதத்தைக் கொண்டது. எ-டு. நிறப்புரிகள், இஸ்டோன்கள், ரிபோசோம்கள். (உயி)

nucleosidase - நியூக்ளியோசிடேஸ்: நியூக்ளியோசைடுகளுடன் சேர்ந்து வினையாற்றிப் பெண்டோஸ் சர்க்கரையுடன் சேர்ந்துள்ள பியூரைன் அல்லது பிரிமிடைனுக்கு இடையே உள்ள பிணைப்பை நீக்கும் நொதி (உயி)

nucleoside - நியூக்ளியோசைடு: ஒர் அரிய மூலக்கூறு. பியூரின் அல்லது பிரிமிடின் மூலங்கொண்டது. இம்மூலம் ரிபோஸ் அல்லது டீஆக்சிரிபோஸ் சர்க்கரையோடு சேர்ந்திருக்கும். அடினோசைன், சைட்டோசைன், கானோசைன், தைமிடின், பியூரிடின் ஆகியவை பொதுவான எடுத்துக்காட்டுகள். (உயி)

nucleotide - நியூக்ளியோடைடு: ஒர் அரிய கூட்டுப்பொருள். ரிபோஸ் அல்லது டி ஆக்சிரிபோஸ் சர்க்கரையோடும் பாசுவரக் காடியோடும் நைட்ரசகாரமான பியுரின், பிரிமிடின் அல்லது பிரிடைன் சேர்ந்தது. குறுக்கமடைவதால் உண்டாவது.