பக்கம்:அறிவியல் அகராதி.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nuc

296

Nyl



உடன் நொதிகளான என்ஏடி, எஃப்ஏடி என்பவை இரு நியூக்ளியோடைடுகள். (ஈரிணைப்பு நியூக்ளியோடைடுகள் உள்ளவை). உட்கருக்காடிகள் என்பவை பல நியூக்ளியோடைடுகள் (பல இணைப்பு நியூக்ளியோடைடுகள்) தொடர் கொண்டவை. (உயி)

nucleus - உட்கரு: 1. உயிரணுவின் முன் கணியத்திலுள்ள (புரோட்டோபிளாசம் வட்டப்பொருள். நிறமியனைக் கொண்டது. நொதிகளை உண்டாக்கிக் கண்ணறைக் கணியத்தின் (சைட்டோபிளாசம்) செயல்களை ஊக்குவிப்பது. 2. அணுக்கரு பருப்பொருள் அணுவிலுள்ள கரு. முன் அணு, நடுநிலை அணு மின்னணு ஆகியவற்றைக்கொண்டது. (ப.து.)

nuclide - வகைக்கரு: குறிப்பிட்ட கருவன்களைக் கொண்ட அணு வின் கரு. 016, 019 என்பவை வேறுபட்ட கருக்கள். (இய)

numerical taxonomy - எண்சார் வகைப்பாட்டியல்: உயிர்த் தொகுதியின் பல பண்புகளின் வேறுபாடுகளை எண்ணியல் பகுப்பு செய்து, அதன் அடிப்படையில் வகைப்பாடு மேற்கொளல். இதில் பண்புகள் முதலிடம் பெறுபவை. (உயி)

nurse tissue - செவிலித்திசு: வளரும் பாலணுக்களுடன் தொடர்பு கொண்டு, அதற்கு ஊட்டமளிக்குந் திசு. (உயி)

nut - கொட்டை: கனியில் ஒருவகை கடினமானது. உலர்ந்தது. வழக்கமாக ஒரு விதை உடையது. பிளவுபடாதது. இணை சூல்இலைச் சூலகப்பையிலிருந்து உண்டாவது. (உயி)

nutation - அசைவாக்கம்: 1. தன்னியக்க வளர்ச்சிவகை. இதில் தாவர உறுப்பின் முனை வளைந்து வளர்தல் 2. நீள்வட்ட முனையில், நிலவுலக முனையின் முன்னிகழ் இயக்கத்தில் ஏற்ற இறக்கம் 3. தலையாடல். (ப.து.)

nutrition - ஊட்டம் பெறல்: ஊட்டமளிப்பு. உயிரிகள் தாங்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான பொருள்களிலிருந்து அவற்றைப் பெறும்முறை. வளர்வதற்கும் பழுது பார்ப்பதற்கும் இவ்வாற்றலைப் பயன்படுத்துகின்றன. பெறும் ஊட்டம் நிறைவூட்டமாக இருத்தல் நலம். நல்ல உடல் நலத்திற்கு நல்ல ஊட்டந்தேவை. (உயி)

nyctinasty - இரவியக்கம்: தாவரங்களின் தூக்க அசைவுகள். ஒளி, வெப்பநிலை ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்களின் தொகுவிளைவு. எ-டு, பூக்கள் திறத்தல், மூடுதல் பா. nastic movement. (உயி)

nyctitropism - இரவுநாட்டம்: இரவில் தாவரங்கள் சில நிலைகளைக் கொண்டிருத்தல். (உயி)

Nylander reagent - நைலாந்தர் வினையாக்கி: பொட்டாசியம் சோடியம் டார்டரேட்டு,