பக்கம்:அறிவியல் அகராதி.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

occ

298

ocu


குறைவு ஏற்படுதல். 2. மூடல்: திறப்பை முடுதல், குறிப்பாகக் குருதிக் குழாய்கள் மூடல். இரு தாடைகளும் சேரும்போது பற்கள் படிதல். 3. அகப்படல்: ஒரு பொருளின் சிறு அளவுகள் மற்றொரு பொருளின் படிகங்களில் மாட்டிக் கொள்ளுதல். எ-டு. கரைசல் படிகமாகும் பொழுது அதில் நீர்மப் பொருட் கள் சிக்குதல். 4. உட்கவரல்: ஒரு திண்மம் வளியை உறிஞ்சுதல். எ-டு, பலாடியம் என்னும் உலோகம் நீர்வளியை உறிஞ்சுதல். (ப.து

occupation - தொழில்: உணவுத் தேவை தொழிலுக்கேற்றவாறு அமையும், கடின வேலை செய்பவருக்கு அதிகக் கலோரிகளை தரக்கூடிய உணவும் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வோர்க்கு குறைவான கலோரி அளவும் தேவை. (உயி)

occupational disease - தொழிலிட நோய்: ஒருவர் செய்யுந் தொழிலினால் ஏற்படும் நோய், காட்டாகத் தூசி படர் தொழிலில் ஈடுபடுவோருக்குத் தூசி நோய் ஏற்படும். (உயி)

ocean - பெருங்கடல்: பேராழி, பரந்த நீர்ப்பரப்பு. உலகப்பரப்பின் 3/4 பங்கை நிரப்புவது. இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், அண்டார்க்டிக் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல் என ஐம்பெருங்கடல்கள் உண்டு. ஒவ்வொரு பெருங்கடலுக்கும் துணைக்கடல்கள் உண்டு. கப்பல் போக்குவரத்துக்கு முதன்மையாகப் பயன்படுவது. அதன் மீன்வளம், கனிவளம் முதலியவை வரம்பற்றவை. (பு.அறி)

oceonography - கடலியல்: 3 கடல்களின் தோற்றம், அமைப்பு, வடிவம் முதலியவற்றை ஆராயுந்துறை. (பு.அறி)

octet - எண்மி: எட்டு மின்னணுக் கள் சேர்ந்தது. அணு அல்லது செயல்குறை வளிகளின் (ஈலியம் தவிர) புற மின்னணுக்கூட்டில் உள்ளது. (வேதி)

octogenarian - எண்பது அகவையர்: அகவை 80க்கு மேலும் 90க்குங் கீழ் உள்ளவர். (உயி)

octohedron - எண்முகி: எட்டு முகங்களைக் கொண்ட பன்முகி. (இய)

octoploid - எண்மம்: எண் தொகுதி நிறப்புரிகளைக் கொண்ட உயிரணு அல்லது உயிரி. நிறப்புரியின் அடிப்படை எண்ணைப்போல் 8 மடங்கு கொண்டது.

octopod - எண்காலி: எட்டுக் கால்களைக் கொண்ட மெல்லுடலி. கை நீட்சிகளின் உட்பரப்பில் ஒட்டுறிஞ்சிகள் உண்டு. நீளம் 8 மீ. எ.டு. அக்டோபஸ் (உயி)

ocular muscles - விழிக்கோளத் தசைகள்: கண்கோளம் இயங்கப் பயன்படுபவை. (உயி)

oculist - கண்நோய் வல்லுநர்: