பக்கம்:அறிவியல் அகராதி.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ocu

299

olf


கண்நோய்களைக் கண்டறிவதில் தேர்ந்தவர். (மரு)

oculomotor - கண்ணியக்க நரம்பு': மூன்றாம் மூளை நரம்பு. கண்தசைகளுக்கு நரம்பிழைகளைச் செலுத்துவது. விழிக் கோளம் சுழல உதவுவது. (உயி)

odd nucleus - ஒற்றை எண் கரு: அல்லணுக்களையும் முன்னணுக்களையும் ஒற்றை எண்களில் கொண்ட அணுக்கரு. (உயி)

odometer - தொலைஅளவுமானி: ஊர்திகள் கடக்குந் தொலைவைப் பதிவு செய்யுங்கருவி. (இய) odontology - பல்லியல்: பல் மருத்துவம. பல்தோற்றம், வளர்ச்சி, பிறழ்ச்சிகள் முதலியவற்றை ஆராயுந்துறை. (மரு)

oersted - ஊர்ஸ்டெட்; சிஜிஎஸ் முறையில் காந்தப்புல வலிமையின் அலகு (இய)

oesophagus - உணவுக்குழல்: உணவு வழியில் தொண்டைக்கும் இரைப்பைக்கும் இடையிலுள்ள பகுதி. (உயி)

off-position - இயங்காநிலை: (ன்சுற்று)போடாநிலை. ஒ. on-position

offset - மறுதோன்றி: 1. கிளை யோடி. குறுகிய ஒடுதண்டு. உறையில் விதையுள்ள தாவரங்களில் விதையிலா இனப்பெருக்கம் செய்ய உதவுவது. 2. அச்சு வகையில் ஒன்று. (ப.து)

offset printing - மறுதோன்றி அச்சு: மூலத்திலிருந்து மாற்றுரு செய்து அச்சியற்றல் (தொ.நு)

offset printers - மறுதோன்றி அச்சகத்தார்: (தொ.நு)

ohm - ஒம்: அலகுச்சொல். மின்தடையின் அலகு. கடத்தியின் இருமுனைகளுக்கிடையே ஒர் ஒல்ட் மின்னழுத்த வேறுபாடு உள்ளபோது, அதன் வழியே செல்லும் மின்னோட்டம் ஒர் ஆம்பியராக இருந்தால், அக்கடத்தியின் மின்தடை ஒர் ஒம். (இய)

Ohm' law - ஓம் விதி: மாறா வெப்பநிலையில், மின்னழுத்த வேறுபாட்டிற்கு மின்னோட்டம் நேர் வீதத்திலும் மின் தடைக்கு எதிர் வீதத்திலும் இருக்கும். I = E / R, R = E / I, E = I* R. I மின்னோட்டம், E மின்னழுத்த வேறுபாடு, R மின்தடை. (இய)

oil - எண்ணெய்: பாகுநிலை நீர்மங்களில் ஒன்று. டீசல், பெட்ரோல், கற்பூரத் தைலம் முதலியவை பயன்மிகு எண்ணெய்கள். இவற்றில் நல்லெண்ணெய். தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், பாமாயில் முதலியவை அடங்கும். (வேதி)

olfactory epithelium - முகர்மென் படலம்: முகர் உறுப்பிலுள்ள உணர்படலம். (உயி)

olfactory glands - முகர் சுரப்பிகள்: முகர் படலத்திலுள்ள சளிச் சுரப்பிகள், பெளமன் சுரப்பிகள். (உயி)