பக்கம்:அறிவியல் அகராதி.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

org

304

ort



வாய்ந்த பிரான்ஸ் பாஸ்டர் நிறுவனம் உயிருள்ள உறுப்புகளை உருவாக்கியுள்ளது. இவையே உறுப்பகங்கள். உடலில் பதிய வைக்கப்படும்பொழுது, வேலை செய்யத் தவறும் உறுப்பின் வேலைகளைச் செய்பவை. சிறு நீரகம் முதலிய உறுப்புகள் பதியஞ் செய்யப்படுவதை மாற்றீடு செய்யவல்லவை. (1993)

organ pipe - காற்றுக்குழாய்: காற்றுக்கம்பம் நிரம்பிய குழாய். ஒரு முனை அல்லது இரு முனைகளுத்திறந்திருக்கும். (இய)

organ transplants - உறுப்பு பதியங்கள்: மனித உடலில் பொருத்தப்படுபவை. இயற்கை உறுப்புகளின் வேலையை செய்பவை.

origin - 1. தோற்றம்: பிறப்பு, தோன்றல், உண்டாதல், தார்வினின் சிறப்பினங்கள் தோற்றம் சிறந்த நூல். 2. தோற்றுவாய்: தசை இணையும் இடம். தசையின் ஒரு முனை நிலையான எலும்புடன் பிணைக்கப்பட்டிருக்கும் இடம். தசையின் மற்றொரு முனை அசையும் எலும்போடு இணைந்திருக்கும். இதற்கு இணைவாய் (இன்சர்ஷன்) என்று பெயர். (உயி)

ornithologist - பறவை வல்லுநர்: பறவைகளை நன்கு அறிந்தவர். இந்தியாவில் சலீம் அலி என்பவர் பறவை வல்லுநராக விளங்கியவர். (உயி)

ornithology - பறவைஇயல்: பறவைகளை ஆராயுந்துறை. (உயி)

ornithomancy - பறவை வழியறிதல்: பறவைகள் பறத்தலை உற்றுநோக்கி அவை செல்லும் வழியறிதல். (உயி)

orthinine cycle - யுரியா சுழற்சி: நொதிக்கட்டுப்பாட்டு வினைகளின் சீரொழுங்கு. அமினோ காடிகள் சிதைவதால், இதில் யூரியா உண்டாகிறது. பா. Nitrogen cycle (வேதி)

orthodiagonal - நேர்மூலை வட்டப்படிகம்: இதன் பக்க அச்சு, செங்குத்து அச்சுக்கு நேராக இருத்தல். (வேதி)

orthopaedics - எலும்பு நன்னியல்: எலும்பு நேரியல், எலும்பு மண்டலத்தின் வேலையை மீட்டலும் பாதுகாத்தலும் பற்றிய அறுனை இயலின் பிரிவு. தவிர, எலும்புப் புழக்கங்கள் அவற்றோடு அமைந்த உறுப்புகள் ஆகியவை பற்றியும் ஆராயுந்துறை. முடநீக்கியல் என்னுஞ் சொல்லும் உள்ளது. (உயி)

orthoptera - நேர்ச்சிறகிகள்: பூச்சி வரிசை, 25,000 வகைகள். வெட்டும் வாய்ப்பகுதிகள். மூடுறை பின்கால்கள் குதிப்பதற் கேற்றவை. செவியுறுப்புகளும் கீச்சுறுப்புகளும் வழக்கம்போல் உண்டு. எ-டு. பாச்சை, வெட்டுக் கிளி. (உயி)

orthotropous - நேர்ச்சூல் இலைச்சூல்பை: சூல்பையில் சூல்