பக்கம்:அறிவியல் அகராதி.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

osc

305

ost



அரிதாக அமைந்திருக்கும் முறை. காம்புக்கும் சூலடிக்கும் (சேலசா) நேர்க்கோட்டில் நுண்துளை அமைந்திருக்கும். (உயி)

oscillation - அலைவு: ஒரு புள்ளியில் இங்குமங்கும் மீண்டும் மீண்டும் ஒழுங்காக ஏற்படும் இயக்கம். (இய)

oscillograph - அலைவரைவி: அலைவடிவ வளைவை வரையுங்கருவி. (இய)

osculum - வாய்த்திறப்பு: கடற்பஞ்சின் தொலைமுனையிலுள்ள அகன்றதுளை. இதன் வழியே உள்ளிருந்து நீர் வெளியேறும். (உயி)

osmium - ஆஸ்மியம்: Os மாறுநிலை உலோகம். பிளாட்டினத்தோடு சேர்ந்திருப்பது. எளிதில் உயிர்வளி ஏற்றம் அடைவது. மை எழுதி முட்கள், இணைப்புகள்ஆகியவற்றில் பயன்படுவது. (வேதி)

osmometer - ஊடுபரவுமானி: படலப்பரவு அழுத்தத்தை அளக்க உதவுங்கருவி. (இய)

osmosis - ஊடுபரவல்: படலம் மூலம் இரு கரைசல்கள் பரவல். அடர்குறை கரைசல் ஒருவழிச் செல்படலம் வழியாக அடர்மிகு கரைசலுக்குச் செல்லுதல். எ-டு. வேர்கள் ஊட்டநீரை உறிஞ்சுதல். பா. exosmosis (உயி)

osmotic pressure - ஊடுபரவழுத்தம்: ஒருவழிச்செல் படலத்திற்கு எதிர்ப்பக்கங்களிலுள்ள கரைசல்களின் செறிவு வேறுபாடுகளால் உண்டாகும் சமநிலை இல்லா அழுத்தம். (உயி)

ossicle - சிற்றெலும்பு: சிறிய எலும்பு போன்ற பட்டை. (உயி)

ossification - எலும்பு தோன்றல்: எலும்பு மூலக்கண்ணறைகளால் உரிய எலும்பு உண்டாகும் முறை. (உயி)

osteoblast - எலும்பு மூலக்கண்ணறை: எலும்பில் சுண்ண ஊட்டமுள்ள இடைவெளிப் பொருள் உண்டாகக் காரணமான அணுக்கள். (உயி)

osteopathology - எலும்பு நோய்இயல்: அறிவியல் முறையில் எலும்புகளை ஆராயுந்துறை. (உயி)

ostiole - சிதல்துளை: சில பாசிகளிலும் பூஞ்சைகளிலும் காணப்படும் சிறியதுளை. இதன் வழியாக ஏற்பகத்திலிருந்து (கான்செப்டகிள்) சிதல்கள் வெளியேறுதல். (உயி)

ostium - வாய்த்துறை: வழித்திறப்பு. இது திறப்பி அல்லது வட்டத் தசையால் காக்கப்பட்டிருக்கும். 1. கணுக்காலியின் இதயத்திலுள்ள பக்கத்திறப்புகளில் ஒன்று. 2. கடற்பஞ்சில் உள்ள துளை. (உயி)

ostrich - நெருப்புக்கோழி: பறவைகளில் மிகப்பெரியது. ஆப்பிரிக்காவில் வாழ்வது. உயர்வரை உயரம் 3 மீ. எடை 150 கி.கி. பறக்கும் திறனற்றது. ஆனால்