பக்கம்:அறிவியல் அகராதி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ant

29

ant


செய்பவை, அல்லது அவற்றை அழிப்பவை. சிறந்த எடுத்துக் காட்டு பெனிசிலின் இதனை அலெச்சாண்டர் பிளமிங் 1928இல் கண்டுபிடித்தார். ஏனையவை ஸ்டெப்டோமைசின், ஆரியோமைசின், டெராமைசின். (உயி)

antibody - எதிர்ப்புப் பொருள்: வெளிப்பொருள் உண்டாக்கும் வினைக்குத் துலங்கலாக உயிரிகளில் உண்டாக்கும். பாதுகாப்புப் பொருள். இதனைத் தடுப்புப் பொருள் என்றும் கூறலாம். இது ஒரு புரத மூலக்கூறே. வெள்ளணுக்கள் எதிர்ப்புப் பொருள்களை உண்டாக்கவல்லவை. பா. antigen. (உயி)

antichlors - குளோரின் நீக்கிகள்: சலவைத்தூளால் வெளுக்கப்பட்ட துணிகளிலுள்ள அதிகப்படியான குளோரினை நீக்கும் வேதிப் பொருள்கள். எ-டு. சோடியம் தயோ சல்பேட், கந்தக இரு ஆக்சைடு, சோடியம் சல்பேட்டு. (வேதி)

antidote - மாற்று: நச்சுமுறி. காடி நஞ்சுக்கு மாற்று. சோடியம் இரு கார்பனேட். (வேதி)

antigen - எதிர்ப்புத்தூண்டி: சாதக நிலைகளில் உயிர் எதிர்ப்புப் பொருளைத் தூண்டும் புரத மூலக்கூறு. இது ஒரு குறிப்பிட்ட எதிர்த் துலங்கல், குச்சியங்கள், நச்சியங்கள் மூலம் உடலுக்கு வருவது. எ-டு. டிவேக் எதிர்ப்புத் தூண்டிகள். பா. antibody. (உயி)

antimater - எதிர் ஏற்றப் பொருள்: புவிக்கு அப்பாலுள்ள கற்பனைப் பொருள். புவியிலுள்ள பொருள் போன்றே துகள்களைக் கொண்டது. ஆனால் துகள்கள் எதிர்மின்னேற்றங்களைக் கொண்டவை. அல்லணுவாகி (நியூட்ரான்) இருத்தல், காந்த முனைத்திறன் கொண்டிருக்கும். (இய)

antimony - ஆண்டிமனி: Sb. நொறுங்கக்கூடிய வெள்ளி நிற உலோகம். வெப்பத்தையும் மின்சாரத்தையும் அரிதில் கடத்துவது, அச்சு உலோகம் செய்யப் பயன்படுவது. (வேதி)

antioxidants - உயிர்வளி ஏற்றித் தடுப்பிகள்: வண்ணங்கள், ரப்பர், பிளாஸ்டிக்குகள் ஆகியவற்றில் உயிர்வளி ஏற்றுவதால் ஏற்படும் தீய விளைவுகளைத் தடுக்கும் பொருள்களாகப் பயன்படுவை. (வேதி)

antinode - எதிர்க்கணு: நிலையான அலைக்கோலத்தில் காணப்படும் பெரும் அதிர்வுப்புள்ளி. ஒ. node. (இய)

antiparticle - எதிர் ஏற்றத்துகள்: ஒரே நிறையும் சுழற்சியும் கொண்டது. எ-டு. முன்னணு (புரோட்டான்). மின்னேற்றம் +1 அலகு. எதிர் ஏற்ற முன்னணு (ஆண்டி புரோட்டான்). மின்னேற்றம் -1 அலகு. (இய)

antipyretic - அனல்குறைப்பி: காய்ச்சலின் போது வெப்ப நிலையினைக் குறைக்கும் மருந்து. (உயி)

antisepsis - புரையஎதிர்ப்பு உண்டாக்கல்: நச்சுயிர் வளர்ச்சியை