பக்கம்:அறிவியல் அகராதி.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

oxi

308

ozo



மின் வேதியியல் முறைகளில் இது முற்றிலும் உண்மை. ஏனெனில், நேர்மின்வாயில் உயிர் வளி ஏற்றமும் எதிர்மின்வாயில் ஒடுக்கலும் நடைபெறும் (வேதி)

oxide - ஆக்சைடு: உயர்வளியுள்ள இரு தனிமச் சேர்மம். எ-டு. மாங்கனிஸ் இரு ஆக்சைடு (வேதி)

oximetry - உயிர்வளி அளவியல்: ஒடும் குருதியில் உயிர்வளிச் செறிவை அளத்தல். (வேதி)

oxygen - உயிர்வளி: உயிரியம். மணமற்ற வளி நிறமற்றது. 21% அளவுக்குக் காற்று வெளியில் தனி உயிர்வளியாய் இருப்பது. நீரில் 79% உள்ளது. உயிர் வாழவும் பொருள்கள் எரியவும் இன்றியமையாதது. நைட்டிரிகக் காடி, கந்தகக் காடி செய்யப்பயன்படுதல். (வேதி)

oxygenation - ஆக்சிஜன் (உயிர்வளி) செலுத்துதல்: மூச்சுப் பரப்பில் ஈமோகுளோபினுடன் தற்காலிகமாக உயிர்வளியை சேர்த்தல் (உயி)

oxygen carrier - ஆக்சிஜன் சுமப்பி: பெராக்சைடு அல்லது மீயாக்சைடு வழிப்பொருள் உண்டாக்க, மூலக்கூறு உயிர்வளியுடன் நேரிடையாகச் சேரும் மூலக்கூறு. உயிர்வளி ஏற்ற வினையில் உயிர்வளியைப் பின்பு பயன்படுத்த வல்லது. எ-டு. ஈமோகுளோபின் (உயி).

oxygen debt - ஆக்சிஜன் கடன்பாடு: கடும் பயிற்சியின் பொழுது உயிர்வளிக் குறைவதால் தசைகளில் பால் காடி குவிதல். (உயி)

oxygen quotient - ஆக்சிஜன் ஈவு: ஒரு திசு அல்லது உயிரி உயிர்வளி நுகரும் அளவு. ஒரு மில்லி கிராமுக்கு இத்தனை மைக்ரோ லிட்டர் என்று தெரிவிக்கப்படுவது. சிற்றுயிரிகளுக்கு அதிக ஈவும் பேருயிரிகளுக்குக் குறைந்த ஈவும் தேவை. (உயி)

oyster - ஆளி: இருதிறப்பு ஒட்டு மெல்லுடலி. இதில் முத்து உண்டாகிறது. உணவாகவும் பயன்படுவது. (உயி)

ozone - ஓசோன்: O3, மிகுவேதி வினையுள்ள நீலநிற வளி, ஒலியிலா மின்னிறக்கத்தின் வழியே உயிர்வளியைச் செலுத்திப் பெறலாம். வெளுக்கும் பொருள். புழுக்கொல்லி, காற்றையும் நீரையும் தூய்மையாக்கும். (வேதி)

Ozonide - ஓசோனைடு: நிறைவுறா ஒலிபீனிகச் சேர்மங்களில் ஓசோன் வினைமூலம் உண்டாகும் பொருள். (வேதி)

ozonisation - ஒசோனாக்கல்: ஒசோன் வளியோடு ஒரு பொருளைச் சேர்க்கும் முறை. (வேதி)

ozoniser - ஓசோனாக்கி: உயிர் வளியை ஓசோனாக மாற்றும் கருவி. மின்தூரிகை இறக்கத்திற்கு உயிர்வளியை உட்படுத்துதல்.

ozonolysis - ஓசோனாற்பகுப்பு: ஓசோனைடை உண்டாக்க, நிறைவுறா அய்டிரோ கார்பனோடு ஓசோனைச் சேர்த்தல், ஓசோனை