பக்கம்:அறிவியல் அகராதி.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

CZO

309

pai


டை நீராற்பகுக்க அய்டிரஜன் பெராக்சைடும் கார்போனைல் சேர்மக் கலவையும் கிடைக்கும். கரிமச் சேர்மங்களின் அமைப்பை உறுதி செய்யப் பயன்படுதல். (வேதி)

ozonosphere - ஓசோன் வெளி: காற்று மேல் வளியடுக்கு. நிலவுலகிலிருந்து 20-50 கி.மீ. வரை பரவியுள்ளது. இங்கு ஒசோன் செறிவு அதிகம். இந்த வளி கதிரவன் புற ஊதாக் கதிர்களை உறிஞ்சி, உயராற்றல் கதிர்வீச்சு நிலவுலகை அடையா வண்ணம் தடுக்கிறது. (இய)


P

pace maker -இதயமுடுக்கி: 1. முதுகெலும்பி இதயத்திலுள்ள முதன்மையான பரப்பு. இங்கு ஏற்படும் மின்னிறக்கம் முளைச்செயலை நீக்குவதால், இதயம் சுருங்குதல். பாலூட்டிகளில் குழிவு மேலறைக்கணு (சைனு ஆரிகுலர் நோட்) முதன்மையான அளவாக்கியாகும். 2. இதயத் துடிப்பின் அளவைச் சீராக்க மனித உடலில் பொருத்தப்படும் சிறிய மின்னணுக் கருவி. (உயி)

pachyderm - தடிமத்தோலி: தடித்த தோலுள்ள விலங்கு எ-டு.யானை, நீர்யானை, (உயி)

paedogenesis - இளமைப் பெருக்கம்: இளமுயிரியில் ஏற்படும் இனப்பெருக்கம். இளமுயிரி என்பது முட்டையிலிருந்து வெளி வந்த உயிர் வளர்ச்சி நிலையிலுள்ளது. சலமாந்தரின் இளமுயிர் இத்திறங் கொண்டது. நிலையான இளமுயிரி நிலை கொண்ட விலங்குகள் இத்திறன் பெற்றிருக்கும். (உயி)

page - பக்கம்: 1. ஒரு கணிப்பொறியில் அடுத்தடுத்துள்ள நினைவக இடங்களின் தொகுதி. பெரும்பான்மையான நுண் கணிப்பொறிகளில் ஒரு பக்கம் 256 இடங்களைக் கொண்டது. சில கணிப்பொறிகள் 512 அல்லது 1024 இடங்களைக் கொண்டிருக்கும். 2. காட்சி வெளிப்பாட்டகத்திற்கு அளிக்கப்படும் முழுச்செய்தித் தொகுப்பு (இய)

pager - தொலையழைப்பி: இடுப்பில் செருகிக் கொள்வதற்கு ஏற்றவாறு உள்ள மின்னணுக் கருவியமைப்பு. குறிப்பிட்ட ஒலி மூலமாகவோ காட்சி மூலமாகவோ ஒருவரை அழைப்பது. அண்மைக் காலத்திலிருந்து நடைமுறையில் இருப்பது. (தொ.து)

pain - வலி: திறந்த நரம்பு முனைகளில், உள்துண்டல், புறத்தூண்டல் மூலம் பெறப்படும் குறைவு உணர்வு, பா. ache (உயி)

paints - வண்ணப்பூச்சுகள்: உலர் எண்ணெயில் நிறமிகளை இரண்டறக் கலந்து பெறப்படும் ஒருபடித்தான கலவை. இதிலுள்ள நிறமிகள் தவிர்த்த ஏனைய பொருள்களாவன. ஏற்றி (வெகிகிள்), உலர்த்தி, நீர்ப்பி,