பக்கம்:அறிவியல் அகராதி.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pai

310

pal


(தின்னர்), உரித்தல் தடுப்பி, இளக்கி, நிரப்பி, இவை உலோகத் தின் மீதும் மரத்தின் மீதும் சூழ் நிலைப் பாதிப்பைத் தடுக்கப் பூசப்படுகின்றன. அரிமானத்தையும் தடுப்பவை. (வேதி)

pair production-இணை உருவாக்கம்:காமா கதிர் ஒளியனிலிருந்து (போட்டான்) மின்னணு, பாசிட்ரான் (நேரியன்) ஆகியவற்றை ஒரே சமயம் உண்டாக்கல். (இய)

palaethnology - தொல்கால மாந்தவியல்: பழங்கால மாந்தனை அறிவியல் முறையில் ஆராயுந்துறை. இதை மாந்த எச்சவியல் என்றுங் கூறலாம். (பு:அறி)

palaeo botany - தொல் தாவரவியல்: அழிந்தொழிந்த தாவர எச்சங்களை அல்லது புதைபடிவங்களை ஆராயுந்துறை. (உயி)

palaeo ecology - தொல் சூழ்நிலை இயல்: உயிர் அறிவியல்களில் ஒன்று. எச்சங்களை ஆராய்வதன் மூலம் வெளிப்படும் சூழ்நிலை உண்மைகளை ஆராயுந்துறை. (உயி)

palaeogaea - தொல்லுலகம்: உயிரியல் வட்டாரமாகக் கருதப்படும் பழைய உலகம். (உயி)

palaeontology -தொல்லுயிரியல்: புவி வளரியலின் (ஜியாலஜி) ஒரு பிரிவு அழிந்தொழித்த உயிரிகள் அவற்றின் புதைபடிவங்கள் (ஃபாசில்ஸ்) ஆகியவை பற்றி ஆராயுந்துறை. இதை எச்சவியல் என்றும் கூறலாம். (பு:அறி)

palaeozoic - தொல்லூழி: நில வளரியல் காலங்களில் மிகப் பழமையானது. பல காலங்களைத் தன்னுள் அடக்கியது. (பு:அறி)

palate - அண்ணம்: 1.பாலூட்டிகளின் வாய்க்கூரை. 2.மூச்சறைக்கும் வாய்க்குழிக்கும் இடையிலுள்ள தடுப்பு. இது அண்ண எலும்பு, மேல்தாடை எலும்பு, முன்மேல் தாடை எலும்பு ஆகியவற்றின் கிடைமட்ட நீட்சிகளாலானது. (உயி)

palatine bone - அண்ண எலும்பு: தவளை தலை எலும்புக் கூட்டில் மேல் தாடையில் முன்னுள்ள எலும்பு (உயி)

palea, pale, valvule - உமிச் செதில்: புல் பூக்கொத்தின் ஒவ்வொரு பூவின் அடியில் இரு பூக்காம்புச் செதில்கள் உண்டு. இவற்றில் மேலுள்ளதற்கு உமிச் செதில் என்று பெயர். மற்றொன்றிற்கு பூஉமி (லெம்மா) என்று பெயர்.

palisade-வேலிக்கால்திசு: இலை நடுத்திசுவின் மேல்பகுதி. இதில் ஒளிச்சேர்க்கை நடத்துவதற்கு வேண்டிய பச்சையம் அதிகமிருக்கும். (உயி)

palladium - பல்லாடியம்: Pd. மாறுநிலை வெண்ணிற உலோகம். தகடாக்கலாம், கம்பியாக்கலாம். நீர்வளி செலுத்தும் வினைகளில் வினையூக்கி அணி