பக்கம்:அறிவியல் அகராதி.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

par

316

реа


parturition -குட்டிபோடல்: கருவுறுங்காலம் முடிந்தபின், பாலூட்டிகள் குட்டிபோடுதல். (உயி)

pascal - பாஸ்கல்: எஸ்ஐ வழியலகு ஒரு சதுர மீட்டருக்கு ஒரு நியூட்டன் அழுத்தத்திற்குச் சமம் (இய)

Pascal's law - பாஸ்கல் விதி: அசைவற்றிருக்கும் ஒரு நீர்மத்தில் ஒரு புள்ளியில் ஏற்படும் அழுத்தம் அதன் ஏனைய புள்ளிகளுக்கும் சமமாகப் பரவும். இதனடிப் படையில் நீரியல் தடுப்பான், நீரியல்தூக்கி, அழுத்தி ஆகியவை அமைந்துள்ளன. (இய)

passage cell-கடத்துகண்ணறை: வேரின் உட்தோலிலுள்ள மெல்லிய சுவருடைய அணு. இதன் வழியே சுற்றுவட்டத்திற்கு நீர் செல்கிறது. (உயி)

passive absorption - வீறுருறை உட்கவரல்: பரவல் விதிப்படி ஒரு பொருளை உயிரணு உறிஞ்சுதல். (இய)

Pasteurisation - பாஸ்டர் முறை: லூயி பாஸ்டர் (1822-95), பாலை இளஞ்சூடாக்கி அதிலுள்ள நுண்ணங்களை அழிக்கும் முறை. (உயி)

patella-முழங்காற்சில்: முழங்கால் முட்டின் முன் தசைநாணிலுள்ள எஸ் வடிவ எலும்பு. பின்காலை நீட்ட உதவுவது. பெரும்பான்மையான பாலூட்டிகளில் உண்டு. சில பறவைகள், ஊர்வன ஆகியவற்றிலும் காணப்படுகிறது. (உயி)

patellar reflex - முழங்கால்மறி வினை: முழங்கால் உதறல் முழங்கால் பந்தகம் தட்டப்படுவதால் கால் முன்தள்ளப்படுதல். இது மருத்துவர் செய்யும் ஆய்வு (உயி)

pathogen - நோயூக்கி: நோயை உண்டாக்கும் உயிரி. (உயி)

pathogenesis - நோய் தோற்றம்: நோய் வளரும் முறை. (உயி)

pathologist -நோய் இயலார்: குறிப்பிட்ட நோயை அறிவதில் தேர்ந்தவர். (உயி)

pathology - நோய்(க்குறி) இயல்: நோய்களை நுணுகி ஆராயுந்துறை. (மரு)

peak current - மீமின்னோட்டம்: பயனுறு மின்னோட்டம் (எபக்டிவ் கரண்ட்) என்று குறிப்பிடப்படுகிறது. மின்சுற்றில் பயனுறு மின்னழுத்தமும் (பீக் ஓல்ட்டேஜ் பயனுறு மின்னோட்டமுமே கணக்கிடுவதற்குப் பயன்படுகின்றன. (இய)

pearl-முத்து: முத்துச்சிப்பியினால் உண்டாக்கப்படுவது. முதன்மையாகக் கால்சியம் கார்பனேட்டிலானது. விலை உயர்ந்த பொருள். சிப்பியின் கூட்டிற்குள் முடகத்திற்கும் ஓட்டிற்குமிடையில் மணல், துகள் முதலிய நுண் பொருள்களில் எவையேனும் ஒன்று சேரும்போது, அதைச் சுற்றி மூடகம் (மேண்டில்) ஓர் உறையை உண்டாக்கும். இதுவே முத்தாக வளர்வது. முத்துக் குளித்தல் (பேர்ல் பிஷிங்) மன்னார் வளைகுடாவிலும், கச்சு