பக்கம்:அறிவியல் அகராதி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ant

30

Apo


அழித்தல் அல்லது திசு நோய்த் தொற்றலைத் தடுத்தல். அறுவையில் இம்முறையினை 1880இல் லார்டு லிஸ்டர் கார்பாலிகக் காடியை முதன்முதலாகப் பயன்படுத்தி அறிமுகப்படுத்தினார். (உயி)

antiseptics - புரைய எதிர்ப்பிகள்: உயிர்த்திசுக்களில் நுண்ணுயிர்கள் வளர்வதைத் தடுக்கும் பொருள்கள் - டெட்டால், அயோடின். (உயி)

antioxin - நச்சு எதிர்ப்பி: நஞ்சை நடுநிலையாக்கும் பொருள். இது ஒர் எதிர்ப்புப் பொருள். நஞ்சுகளை ஊசி மூலம் செலுத்தி, அவற்றினால் உண்டாகும் துலங்கலுக்கேற்ப இந்நஞ்சு உண்டாக்கப்படுவது. (உயி)

anus - கழிவாய்: ஆசனவாய், உணவு வழியின் பின் திறப்பு. இதன் வழியே கழிவு வெளியேறும். (உயி)

aorta - பெருந்தமனி: உடலில் உள்ள பெருங்குருதிக் குழாய். பல தமனிகளாகப் பிரிந்து குருதியினை இதயத்திலிருந்து உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வது. (உயி)

aperiodic - அலைவற்ற, அதிர்வற்ற: கால நிகழ்வற்ற (இய)

aperture - குறுந்துளை: ஒளிக் கருவிகளில் ஒளியினை உள்விடும் திறப்பு. எ-டு. ஒளிப்படப் பெட்டி, துண்ணோக்கி. (இய)

apetalous - அல்லியிலா: சில தாவரப் பூக்களில் அல்லிகள் இல்லாத நிலை. (உயி)

apheion - கதிரவன் சேய்மை நிலை: பகலவனின் மையத்திலிருந்து பெருந்தொலைவிலுள்ள கதிரவன். நிலாவின் சுற்றுவழிப் புள்ளி. (வானி)

aphid - அசுவனி: தாவரப் பேன் 1-5 மி.மீ நீளமுள்ளது. பேரிக்காய் வடிவம். மெல்லுடல். நீண்ட கால்களும் உணரிகளும் உண்டு. (உயி)

apiary - தேனீ வளர்ப்பு: தேன் திரட்டவும் தேன் மெழுகு எடுக்கவும் தேனிக்கள் வளர்த்தல். (உயி)

apical meristem - நுனி வளர்த்திசு: பா. meristem.

apocarpous - இணையாச் சூலகம்: தாவரச் சூலகத்தில் சூல் இலைகள் தனித்தனியாக இருத்தல். எ-டு. மனோரஞ்சிதம். (உயி)

apocyntion - திங்கள் சேய்மை நிலை: திங்கள் நிலாவின் சுற்று வழியில் திங்களிலிருந்து அமையும் அப்பால் நிலை. (வானி)

apogamy - அல்கலப்பு: ஒரும (n) சிதல் தாவரம் பாலணுத் தாவரத்தின் எப்பகுதியிலும் வளர்தல், இதில் பாலணுக் கலப்பு இல்லை. (உயி)

apogee - புவிச்சேய்மை நிலை: புவி மையத்திலிருந்து பெருந்தொலைவிலுள்ள புவி நிலாச் சுற்று வழிப் புள்ளி. எ-டு செயற்கை நிலாவின் புள்ளி. ஒ. perigee.

Apollo - அப்பல்லோ: மனிதனைத்