பக்கம்:அறிவியல் அகராதி.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pel

318

pen



pelvis-1. இடுப்பு வளையம். 2. தட்டம். : இடுப்பு வளையத்தின் எலும்புகளால் உண்டாக்கப்படும் தாழ்வான குழி, சிறுநீரகத்தட்டம் சிறுநீரகத்தின் மையக்குழி.(உயி).

pencil - கற்றை: ஒளிக்கற்றை பா. band.(இய).

pendulum, compensated - ஈடு செய் ஊசல்: சூழ்நிலையில் வெப்பம் ஏறினாலும் இறங்கினாலும் அதன் நீளம் மாறா ஊசல் ஈடுசெய்த ஊசலாகும். தற்கால ஊசல்கள் பொதுவான வெப்ப நிலையில் நீள்பெருக்கம் அடையாத இன்வார் என்னும் உலோகக் கலவையால் செய்யப்பட்டுள்ளன. கிரகாமின் பாதரச ஊசல், கேரிசன் ஊசல் எல்லாம் புழக்கத்தில் இல்லாதவை. (இய).

pendulum, simple - தனி ஊசல்: மெல்லிய முறுக்கற்ற நூலில் தொங்கவிடப்படும் குண்டு. ஊசல் ஒரு திரும்புபுள்ளியிலிருந்து எதிர் திரும்புபுள்ளிக்குச் சென்று மீண்டும் அதே திரும்பு புள்ளிக்கு வரும்வரை ஏற்படுகின்ற அசைவு அலைவு. ஊசல் ஓர் அலைவுக்கு எடுத்துக் கொள்ளும் நேரம் அலைவு நேரம், அலைவில் பாதி அதிர்வு. அதிர்வில் பாதி வீச்சு. வீச்சு குறைந்தாலும் கூடினாலும் ஊசலின் அலைவு நேரம் மாறாது. இந்த அலைவு நேர மாறாப் பண்பே ஊசலின் சம அலைவு நேரம். இந்த அடிப்படை, ஊசல் கடிகாரங்களில் உள்ளது. பா. pendulum .(இய).

penetrance - மரபுத்தகவு : ஒரு மரபணுவின் புறமுத்திரை வெளிப்பாட்டின் அளவு. பல மரபணுக்கள் 100% தகவுடையவை. சிலவற்றில் இத்தகவு குறைவாக இருக்கும். இம்மதிப்பு சூழ்நிலை அல்லது மரபு முத்திரையால் பாதிக்கப்படும்.

penguin - பென்குயின்: தென் கடல் பகுதிவாழ் பறவை. பறக்கும் திறனற்றது. கூடுகட்டத் தெரியாது. முன்புறத்துறுப்புகள் துடுப்புகளாகியுள்ளதால், அவற்றைக் கொண்டு நீரில் நீந்தும். விரல் இடைத்தோல் உண்டு. முட்டையிடவே கரைக்கு வரும். (உயி)

penicillin - பெனிசிலின்: சிறந்த முதல் உயிர் எதிர்ப்பு மருந்து. தொற்று நுண்ணங்களை அழிப்பது. அலெக்சாண்டர் பிளமிங் (1881-1955) இதனைக் கண்டுபிடித்தார். பெனிசிலியம் நொட்டேட்டம் என்னும் பூஞ்சணத்திலிருந்து தயாரிக்கப்படுவது. இதற்குப் பின் வந்தது ஸ்டெரப்டோமைசின். இதனை 1944இல் செல்மன் வாக்ஸ்மன் என்பார் கண்டறிந்தார். (உயி)

pentadactyl limb - ஐவிரல் உறுப்பு: ஐந்துவிரல்களைக் கொண்டது. கை, கால். (உயி)

pentamerous - ஐந்து அல்லது ஐம்மடங்கு: பூவின் ஒவ்வொரு வட்டத்திலும் பகுதிகள் ஐந்து அல்லது ஐந்தின் மடங்காக