பக்கம்:அறிவியல் அகராதி.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pes

322

pet



Pessary-உடற்செருகி: அறுவைச் செருகி, அல்லது மருந்துள்ள கருவி. கருவுறுதலைத் தடுக்கப் பிறப்பு வழியில் பயன்படுத்துங்கருவி. (மரு).

Pests - தொற்றிகள்:கட்டுப்படுத்தப்பட வேண்டிய அளவுக்கு மனிதனுக்குத் தொல்லைதரும் தாவரங்கள் அல்லது விலங்குகள். இவை தீங்குயிரிகளே. (உயி)

Pesticide - தொற்றுக் கொல்வி: தொற்றிகளைக் கொல்லும் மருந்துகள். இவை பூஞ்சைக் கொல்லி, பூச்சிக்கொல்லி, எனப் பல வகைப்படும். (உயி)

Pestilence -கொள்ளைநோய்: அதிக அளவில் பரவிக் கேட்டை விளைவிக்கும் நோய். எ.டு.காலரா ரா, (உயி)

Pestology -தொற்றி இயல்: வேளாண் தொற்றிகளையும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளையும் ஆராயுந்துறை. (உயி)

Petal- அல்லி:பூவின் அல்லி விட்டத்திலுள்ள ஒரு தனி இதழ். அல்லிகள் சேர்ந்தது அல்லி விட்டம். ஒ. sepal. (உயி )

Petalody -அல்லிவயமதல்:இனப்பெருக்க உறுப்புகளான மகரந்தமும் சூல் இலைகளும் அல்லிகளாதல். எ.டு. இரட்டைப்பூ (உயி)

Petiole-காம்பு: இலைப்பரப்பைத் தாங்கும் பகுதி. (உயி)

Petri dish -பெட்ரி கிண்ணம்:பெட்ரி (1852-1921) என்பவர் பெயரால் அமைந்த தட்டை அடியுடைய வட்டக் கண்னாடிக் கிண்ணம். (வேதி)

Petrification -கற்படிவாதல்: கரிமஉறுப்பு. கல் அல்லது கனிம உறுப்பாதல். (உயி)

Petro chemicals -பாறை எண்ணெய்ப் பொருள்கள்: பெட்ரோ லியம் அல்லது இயற்கை வளியிலிருந்து உண்டாகும் பொருள்கள். (வேதி)

Petrol - பெட்ரோல்: கேசோலின்.ஆவியாகக் கூடிய அரிய கலவை. முதன்மையாக அய்டிரோ கார்பன்களாலானது. (கெப்டேன், கெக்சேன், அக்டேன்). பெட்ரோலியத்தை வடித்துப் பகுக்கக் கிடைக்கும் ஊர்தி எரிபொருள். ஒரு நாட்டின் மிகுபொருள் வளம் இதைச் சார்ந்தே உள்ளது. (வேதி)

Petrolatum - பெட்ரோலேட்டம்: பெட்ரோலிய இழுது. தூய்மை செய்யப்பட்ட அய்டிரோ கார்பன் கலவை. அரைக்கெட்டி நிலையிலுள்ள மஞ்சள் நிறப் பாரபின். மென்மையானது. வாசலின் என்று தவறாகக் கூறப்படுவது, (வேதி)

Petroleum -பெட்ரோலியம்: பாறை எண்ணெய். கல்லெண் னெய், கடல் விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றிலிருந்து தோன்றிய அய்டிரோகார்பன் கலவை, நிலத்திற்கடியில் பாறை யடுக்குகளுக்கிடையே காணப்படு-