பக்கம்:அறிவியல் அகராதி.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pho

329

phy


இலைத்துளைகளின் வாயிலாகப் பெறுங் கரி ஈராக்சைடு, வேர் மூலம் மண்ணிலிருந்து பெறும் ஊட்டநீர் ஆகியவற்றைக் கொண்டு அவற்றின் பசும் இலைகளும் தண்டுகளும் கதிரவன் ஒளியில் பச்சையத்தின் உதவியால் மாப்பொருள் உண்டாக்குவதற்கு ஒளிச்சேர்க்கை என்று பெயர். ஒளி, நீர், கரி ஈராக்சைடு, பச்சையம் ஆகிய நான்கும் ஒளிச் சேர்க்கை நடைபெற இன்றியமையாதவை. இவற்றில் ஒன்று இல்லை என்றாலும் ஒளிச்சேர்க்கை நடைபெறாது. இச்செயல் வேதிமுறையில் நன்கு ஆராயப் பெற்றுள்ளது. (உயி)

photosynthetic bacteria - ஒளிச்சேர்க்கை குச்சியங்கள்: சில குச்சியங்கள் பச்சையத்தைப் பெற்றுள்ளன. இதற்குக் குச்சியப் பச்சையம் (பாக்டீரிய குளோரோபில்) என்று பெயர். இதைப் பெற்றிருப்பதால், அவை ஒளிச் சேர்க்கை நடத்த வல்லவை. (உயி)

photosynthetic pigments - ஒளிச்சேர்க்கை நிறமிகள்: ஒளிச்சேர்க்கைக்குத் தேவையான ஒளியாற்றலை உறிஞ்சும் நிறப்பொருள்கள். பச்சையம், பசுங்கணிகங்கள் எடுத்துக்காட்டுகள். (உயி)

phototaxis - ஒளியமைவு இயக்க்ம: ஒளித்தூண்டலால் இடம் மாறுதல். (இய)

phototherapy - ஒளிப்பண்டுவம்: ஒளிமூலம் நோய்நீக்கல். (உயி)

phototroph - ஒளிவாழ்வி: கரிமச்சேர்மங்களைத் தொகுக்க நேரிடையாகக் கதிரவனிடமிருந்து ஆற்றலைப் பெறும் உயிரி. எ.டு. பசுந்தாவரம். (உயி)

phototropism - ஒளிநாட்டம்: ஒளியினால் ஏற்ப்படும் வளைவியக்கம், ஒளிநோக்கி தண்டு வளர்வது. இருள்நோக்கி வேர் வளர்வது. (உயி)

phycology - பாசிஇயல்: பாசிகளை அறிவியல் முறையில் ஆராய்தல். (உயி)

phylloclade - இலைத்தண்டு : ஒருவகை இலைத்தொழில் தண்டு. இதில் தட்டையான தண்டு இலையின் ஒளிச்சேர்க்கை வேலையைச் செய்வது. இங்கு இலைகள் முட்களாகவோ செதில்களாகவோ மாற்றுரு பெற்றிருக்கும். சப்பாத்தி. ஒ. cadode,phylode. (உயி)

phylode - இலைத்தொழில் காம்பு: தட்டையான இலைக்காம்பு. இலைபோன்று அமைந்து அதன் வேலையைச் செய்தல். எ.டு. அக்கேசியா சிறப்பினங்கள். ஒ. (உயிர்) dadode.

phylody - இலைமாறுநிலை: இது ஒரு தாவரநோய். பூவின் பகுதிகள் நோயினால் இலைபோன்ற உறுப்புகளாதல், (உயி);

phyllopodium - இலைக்கால்:(உயி)

phyllotaxy - இலையமைவு: தண்டில் இலைகள் அமைந்துள்ள முறை. (உயிர்) இது பல வகை.