பக்கம்:அறிவியல் அகராதி.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pol

339

pol



pollution control - மாசு கட்டுப்பாடு: மாசாதலை முயன்று குறைத்தல். தொழிற்சாலைக் கழிவுகளைக் கட்டுப்படுத்தச் சட்டங்கள் உள்ளன. தவிரப் புகையிலா எரிபொருள்கன்ள உண்டாக்கலாம். சில தொற்றுநோய்க் கொல்லிகளைத் தடை செய்யலாம். (உயி)

polycarpellary pistil - பல சூழ் இலைச்சூலகம்: பல சூல்இலைகளைக் கொண்ட சூலகம். இவை பூத்தளத்தில் இணைந்தும் இணையாமலும் இருக்கலாம். (உயி)

polydipsia - மிகுநீர்வேட்கை: அதிக அளவு நீர் உட்கொள்ளல். (உயி)

polyembryony - பலக்கரு தோற்றம்: ஒரு சூலில் ஒன்றிற்கு மேற்பட்ட கருதோன்றுதல். (உயி)

polyester - பாலியெஸ்டர்: ஒரு தொகுப்பிழை, டெரிலின், டெக்ரான். (வேதி)

polymer - பல்படி: எளிய மூலக்கூறுகளின் நீள்வரிசை கொண்ட சேர்மம், ஒரே செயல்நிலை வாய்பாடு. ஆனால் அதிக மூலக்கூறு எடை கொண்டது. (வேதி)

polymerase chain reaction - பாலிமரேஸ் தொடர்வினை: இஃது ஓர் உயரிய வேதிநுட்பம். இதனைக் கண்டறிந்தவர் அமெரிக்க உயிர் வேதி இயலார் கேரி முல்லிஸ். இதற்காக 1993க்குரிய வேதித்துறை நோபல் பரிசின் ஒரு பகுதி இவருக்குக் கிடைத்தது. மரபு வழி நோய்களிலுள்ள குறைபாடு கொண்ட மரபணுக்களை இனங்காண இந்நுட்பம் பெரிதும் பயன்படும். மரபாக்க வளர்ச்சிக்கு இது அச்சாணி போன்றது. தவிர, மருத்துவ ஆய்விலும் நோய் கண்டறிதலிலும் தடய அறிவியலிலும் பெரிதும் பயன்படக் கூடியது. (மரு)

polymerisation - பல்படியாக்கல்: ஒரு சேர்மத்தின் பலமூலக் கூறுகள் இணைந்து உருவாகும் ஒர பெரிய மூலக்கூறு பல்படி இவ்வாறு இணையும் வினை பல்படியாக்கலாகும். எ-டு பாலி எத்திலீன். இதில் ஏறத்தாழ 1200 கார்பன் அணுக்கள் சங்கிலித் தொடராக அமைந்துள்ளன. (வேதி)

polymorphism - பல்லுருத்தோற்றம்: ஒரேவகை உயிரில் வேறுபட்ட வடிவங்கள் இருத்தல், இந்திலை மரபுக்காரணிகளாலோ சூழ்நிலைக் காரணிகளாலோ ஏற்படலாம். (உயி)

polyp - குழாய் உடலி: குழாவி. வாழ்க்கைச் சுற்றின் ஒரு நிலை. இதில் குழாய் வடிவத்தில் உடல் இருக்கும். ஒரு முனையில் உணர்விரல்களால் வாய் சூழப்பட்டிருக்கும். மற்றொரு முனை நிலையான பரப்பில் இணைந்திருக்கும் உறுப்பு முலம் இனப்பெருக்கம். பா.

polypetalous - அல்லி இணை