பக்கம்:அறிவியல் அகராதி.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

por

341

pot


por poripera - துளை (புழை, புரை) உடலிகள்: இடம்பெயரா நீர் வாழ்விகள், 5,000 வகைகள். ஒற்றை உடற்குழிகள் துளைகள் உண்டு. உப்புநீரிலேயே காணப்படும். கடற்பஞ்சுகள். (உயி)

porpoise - பார்பாய்ஸ்: டால்பின் குடும்பத்தைச் சேர்ந்தது. நீளம் 122.4 மீ உடல் வரித்தடை உள்ளது. குறுகிய மூஞ்சி. ஊன் உண்பது. கூட்டமாக வாழ்வது. எண்ணெயும் தோலும் அளிப்பது. (உயி)

portal vein - வாயில் சிரை: குறிப்பிட்ட இரு பகுதிகளின் தந்துகி வலைப்பின்னலை இணைக்கும் சிரை. பா. hepatic portal system. (உயி)

positive lens - நேர்க்குறி வில்லை: நேர்க்குறி குவியத்தொலைவு உள்ள வில்லை அல்லது எதிர்க் குறித்திறனுள்ள குவிவில்லை. (இய)

positive rays - நேர்க்குறிக்கதிர்கள்: நேர்மின்னோட்டமுள்ள அயனி ஒட்டம். அரிய வளியில் மின்னிறக்கத்தினால் பெறப்படுவது. (இய)

positron - நேர்மின்னேற்றி: (e+). மின்னணுவின் எதிர்த்துகள். அதைப் போன்ற் பொருண்மையும் சுழற்சியுங் கொண்டது. ஆனால் நேர்மின்னேற்றம் கொண்டது. நேர்மின்னனுக்கள் விண்கதிர் பொழிவுகளில் காணப்படுகின்றன. ஒருவகைப் பீட்டா சிதைவினாலும் இவை உண்டாக்கப்படுகின்றன. ஒரு மின்னணுவை எதிர்நோக்கும் பொழுது இவை அழிக்கப்படுகின்றன. நேரியன் என்றுங் கூறலாம். (வேதி)

postcaval vein, inferior vena cava - கீழ்ப்பெருஞ்சிரை: உடலின் கீழ்ப் பகுதியிலிருந்து குருதியைத் திரட்டி இதயத்தின் வலது அறையில் திறக்கும் பெரிய சிரை. (உயி)

postoffice box - அஞ்சல்நிலையப் பெட்டி: மின்தடைகளைக் கொண்டிருக்கும் பெட்டி. இவற்றை மின்சுற்றொடு இணைக் கலாம். மின்னழுத்தமானியாக அல்லது வீட்ஸ்டோன் மின் சுற்றியாகப் பயன்படுதல். (இய)

posterior - முன்: 1. விலங்கின் கடைப்பகுதி. மனிதனின் முதுகுப் புறம். 2. தண்டுப்பூ நோக்கிய. (உயி)

potash - பொட்டாஷ்: பொட்டாசியம் கூட்டுப் பொருள்களில் ஒன்று. எ-டு பொட்டாசியம் அய்டிராக்சைடு, கார்பனேட். (வேதி)

potassium - பொட்டாசியம்: K. கார உலோகம், வெண்ணிறம், மென்மையானது. பொட்டாசியம் அய்டிராக்சைடை நீராற் பகுக்கக் கிடைக்கும். உயிர்வாழ இன்றியமையாதது. எல்லா உயிர்ப் பொருள்களிலும் உள்ளது. உலோகக் கலவை செய்யவும் ஒளி மின்கலங்கள் செய்யவும் பயன்