பக்கம்:அறிவியல் அகராதி.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pot

343

pow


சூடானதும் நிறைவுள்ளதுமான பொட்டாசியக் குளோரைடு கரைசலுடன் சோடியம் நைட்ரேட்டைச் சேர்க்கக் கிடைக்கும். வெடிகுழல்துள், நைட்ரிகக் காடி, வாணவேடிக்கைப் பொருள்கள் ஆகியவை செய்யப் பயன்படுவது. (உயி)

potassium sulphate - பொட்டாசியம் சல்பேட்: K2SO4 நிறமற்ற சாய்சதுரப் படிகங்கள். பொட்டாசியம் குளோரைடில் கந்தகக்காடியைச் சேர்க்கக் கிடைக்கம். படிகாரம், கடினக் கண்ணாடி, உரம் ஆகியவை உண்டாக்கப் பயன்படுவது. (வேதி)

potential energy - நிலையாற்றல்: தன்நிலை, வடிவம் ஆகியவற்றைப் பொறுத்து, ஒரு பொருளில் தேங்கி இருக்கம் ஆற்றல், எ-டு தொட்டிநீர் (இய)

potentiometer - மின்னழுத்தமானி: மின்னழுத்த வேறுபாட்டை அளக்குங் கருவி. (இய)

potometer - நீர் அளவுமானி: வெட்டிய தண்டு நீரில் வைக்கப்படும் பொழுது, அது ஏற்கும் நீரை அளக்குங்கருவி (உயி)

pouitry-கோழிவளர்த்தல்: கோழி முட்டைகளில் புரத ஊட்டம் அதிகம் உள்ளதால், இதைப் பெறக் கோழிகளை வளர்ப்பது நல்லது. ஆதாயமுள்ள தொழில். இத்தொழிலில் தனியார் பலர் ஈடுபட்டுப் பெரும் அளவில் ஆதாயத்துடன் நடத்தி வருகின்றனர். அனைவரும் உட்கொள்வது முட்டை (உயி)

powder metallurgy - தூள் உலோகவியல்: உயர்வெப்ப நிலைகளில் பல வடிவங்களில் தூள் உலோகங்கள் அல்லது கலவைகள் அமைக்கப்படுதல். (வேதி)

power - திறன்: 1. ஒரு வினாடி நேரத்தில் செய்யப்படும் வேலை. அதாவது, வேலை செய்யப்படும் விரைவு.

P = W/T

P. திறன் W. வேலை T. காலம். சார்பிலா அலகு எர்க்கு/வினாடி நில ஈர்ப்பு சார்ந்த அலகு செமீ கிராம், வினாடி. நடைமுறை அலகு வாட் (2) ஆற்றல். (இய)

power alcohol - ஆற்றல் ஆல்ககால்: ஆல்ககாலுடன் பெட்ரோலைச் சேர்த்துச் செய்யப்படும் கலவை. உந்துவண்டி எந்திரங்கள், ஏவுகணை எந்திரங்கள் ஆகியவற்றின் எரிபொருள். (இய)

power electronics - ஆற்றல் மின்னணுவியல்: திண்நிலைத் தொழில்நுட்ப இயல். தொகுதியாற்றல் வழங்குகையைத் திறமையாகக் கையாளப் பயன்படுவது. இதற்குப் பயன்படும் அரைகுறைக் கடத்திக் கருவியமைப்புகள் இரண்டாம் மின்னணுப் புரட்சியை உண்டாக்குபவை.