பக்கம்:அறிவியல் அகராதி.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pow

344

pre


power resources - ஆற்றல் வளங்கள்: நீர், நிலக்கரி, மின்சாரம் முதலியவை. இவை பெருந்தொழில் வளங்களாகும். (இய)

prawn - இறால்: சிறிய நண்டு வகை விலங்கு கடலில் வாழ்வது. நீளம் 5-2 செ.மீ. உண்ணக் கூடியது. ஈரினை உணரிகளும் ஐந்தினை கால்களும் உண்டு. இணையான வயிற்று ஒட்டுறுப்பு களும் உண்டு. இதன் வளர்ப்பை அரசு ஊக்குவிக்கிறது. (உயி)

prawn fishery - இறால் வளர்ப்பு: இந்தியாவின் பல பகுதிகளிலும் சிறப்பாக நடைபெறுவது. குறிப்பாகக் கேரளத்தில் அறுவடைக்குப் பின் நெல்வயல்களில் இறால் வளர்க்கும் முறை நவம்பர் முதல் ஏப்ரல் முடிய நன்கு நடைபெறுவது. ஏறத்தாழ 4,400 ஹெக்டேர் பரப்புள்ள வயல்கள் இதற்குப் பயன்படுத்தப் படுகின்றன. ஒவ்வொரு ஹெக்டேர் நிலத்திலும் ஏறத்தாழ 500-2,000 கி.கி. இறால் கிடைக்கிறது. இறாலின் இளம் உயிர்கள் வளர்க்கப்பட்டுப் பிடிக்கப்படுகின்றன. ஜப்பானில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 6,000 கி.கி. இறால் கிடைக்கிறது. இந்தியாவில் இவ்வளர்ப்பு வளர வேண்டிய ஒரு துறை. (உயி)

precaval vein, superior venacava மேற்பெருஞ்சிரை: இரட்டைச் சிரை. உடலிலிருந்து இதயத்திற்குக் குருதியைக்கொண்டு வருவது. பா.

precipitate - வீழ்படிவு: தயிர் போன்ற கரையாப்பொருள். வேதி வினையினால் ஒரு கரைசலில் உண்டாவது, எ-டு. நீர்த்த அய்டிரோகுளோரிகக் காடியில் உரிய வெள்ளி நைட்ரேட்டுக் கரைசலைச் சேர்க்க வெள்ளிக் குளோரைடு வீழ்படியும். வீழ்படிவு உண்டாகுஞ்செயல் வீழ்படிதல் ஆகும். (இய)

precipitation - வீழல்: இது சூழ்நிலைக் காரணிகளில் ஒன்று. எல்லா வாழிடங்களிலும் உயிரினங்களுக்கு நீர் தேவை. நிலையான ஊற்றுகள், ஓடைகள், குளங்கள் முதலிய நீர் நிலையுள்ள வாழிடங்களில் நீர் எப்பொழுதும் கிடைக்கும். மலை, பாலை முதலிய பகுதிகளில் வீழலால் மட்டுமே நீர் கிடைக்கும். இதில் மழை, பனி, உறைபனி முதலியவை இடம் பெறுகின்றன. இம்மூன்றில் பனி மட்டுமே அதிகம் பயன்படுவதாகும். அடுத்து மழையைக் கூறலாம். (இய)

predation - இரைகொல்லல்: சிங்கம் மானைக் கொன்று தின்னல். (உயி)

predators - இரைக்கொல்லிகள்: ஒரு விலங்கு மற்றொரு விலங்கை இரையாகக் கொள்ளுதல். புலி மானைக் கொல்லுதல் (உயி)

pregnancy - கருப்பேறு: விந்து முட்டையோடு சேர்வதால் ஏற்படும் கருவளர்நிலை. (உயி)