பக்கம்:அறிவியல் அகராதி.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pre

345

pri


prepubis - இடுப்பு முன்எலும்பு நீட்சி: ஊர்வனவற்றில் இடுப்பு முன் எலும்பிலுள்ள சிறிய குழாய் போன்ற உறுப்பு. (உயி)

preservatives - பாதுகாப்புப் பொருள்கள்: பொதுவாகச் சில பொருள்களைக் கெடாமல் பார்த்துக் கொள்ளச் சேர்க்கப்படும் பொருள்கள். இறந்த தாவரங்களையும் விலங்குகளையும் பாதுகாக்கப் பார்மலின் பயன்படுவது. ஊறுகாயில் உப்பு, கடுகு, எண்ணெய் முதலியவையும் பாதுகாப்புப் பொருள்களே.

pressure - அழுத்தம்: அலகுப் பரப்பின் (1 செமீ x 1 செமீ) மீது ஏற்படும் இறுக்கம். P= hd. p-அழுத்தம் h-உயரம் d-அடர்த்தி. ஒ. thrust.

pressure cooker - அழுத்த சமைப்பி: காற்று வெளியழுத்த அடிப்படையில் உணவுப் பொருள்களை வேகவைக்கும் சமையல் கருவி. (உயி)

pressure gauge - அழுத்த அளவி: அழுத்தத்தை அளக்குங் கருவி. (இய)

prickle - கூர்முள்: ஒரு தாவரத்தின் மேற்பகுதியிலிருந்து உண்டாகும் பாதுகாப்புப் புற வளர்ச்சி. புறத்தோல் தோற்றமுடையது. சப்பாத்திமுள். (உயி)

primary cell - முதல்மின்கலம்: ஒல்டா மின்கலம். எ-டு தானியல் மின்கலம் முதலியவை. ஒ. secondary cell. (இய)

primary colours - முதல் நிறங்கள்: மூன்று நிறத்தொகுதி. உரிய வீதத்தில் கலக்க வெள்ளை உணர்ச்சியை அளிக்கும். சிவப்பு, பச்சை, நீலம் ஆகியவை அம்மூன்று நிறங்கள். ஒ. secondary colours. (இய)

primary growth - முதல்நிலை வளர்ச்சி: முனை ஆக்குத்திசுவிலிருந்து உண்டாகும் வளர்ச்சி. இது தாவர உறுப்புகளை நீளவாட்டில் வளர்ப்பது. ஓ. (உயி)

primary tissue - முதல்நிலை திசு: ஆக்கு திசுவிலிருந்து உண்டாவது. (உயி)

primary winding - முதல்நிலைச் சுருள்சுற்று: ஒரு மின்மாற்றி அல்லது துண்டு சுருளிலுள்ள உட்பாட்டுப்பக்கச் சுற்று. (இய)

primates - முதல்நிலை உயிரிகள்: பாலூட்டிகள் வரிசையைச் சார்ந்தவை. மனிதன் உட்படக் குரங்குகள். மனிதக் குரங்குகள் ஆகியவை அடங்கிய வரிசை. (உயி)

priming - மீயெழுச்சி: கொதி கலவையிலிருந்து விரைவாகவும் வீறுடனும் நீர் கலந்து ஆவி வெளிவருதல், நீராவியுடன் நீர் கலந்து செல்வதால், நீராவியின் வெப்ப அளவு குறையும். நீரில் அதிக அளவு கரிமச் சேர்மங்கள், காரம், தொங்கல் மாசுகள் முதலியவை இருத்தல் இதற்குக் காரணமாகும். நீரைச் சீராகச் சூடாக்கியும் செதில் தோன்றுவதைத் தடுத்தும் இதைத் தவிர்க்கலாம். (இய)