பக்கம்:அறிவியல் அகராதி.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pri

346

pro


primordial - முதலில் தோன்றிய: (உயி)

primordium - முதல் தோன்றி: முதிராத் தாவரம். இது உயிரணு, திசு அல்லது உறுப்பாக வளர்வது. எ-டு இலை முன்தோன்றி, பின் இலையாக வளர்தல். (உயி)

principal axis - முதன்மை அச்சு: பா. concave lens.

principal focus - முதன்மை குவியம்: பா. concave lens. (இய)

principa! point - முதன்மைப் புள்ளி: ஒரு தடித்த வில்லையின் முதன்மை அச்சில் இருபுள்ளிகளில் ஒன்று. (இய)

principle of complementarity - நிரப்புதிறன் நெறிமுறை: டேனிஷ் இயற்பியலார் நீல்ஸ் போர் கருத்து. ஒளியன் ஒளியனே. அலை அலையே என்பது இதன் சாறு. இது ஐயப்பாட்டு நெறி முறையின் ஒருவகையே.

printed circuit - அச்சுப்பதிவு சுற்று: இது ஒரு கம்பி மின்சுற்று. மெல்லிய ஒரு செப்புத்தகட்டில் இச்சுற்றின் வடிவம் பதிவு செய்யப்பெற்று ஒரு பலகையில் பொருத்தப்பட்டிருக்கும். பா. integrated circuit. (இய)

printout - அச்சுப்பாடு: இது அச்சியற்றியினால் தாளில அச்சிடப்படுவது. நிகழ்நிரல் பட்டியல்கள், படம் முதலியவை. (இய)

prism - முப்பட்டகம்: முப்பட்டைக் கண்ணாடி முக்கோண ஆடிகளைக் கொண்டது. ஒளிக்க திரை விலகலடையச் செய்யவும் வெள்ளொளியை பார்வை நிற மாலையாகச் சிதறலடையச் செய்யவும் தலைகீழ் உருவத்தை நேராக்கவும் பயன்படுவது. (இய)

probability - நிகழ்தகவு: ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி ஏற்படக்கூடிய வாய்ப்பு. (இய)

problem - சிக்கல்: எளிதில் தீர்க்க இயலாத ஓர் இடர். கற்றல் அல்லது வாழ்க்கை பல சிக்கல்கள் நிறைந்தது. இதற்குத் தீர்வு காண்பதே உளவியலின் நோக்கம். இம்முறை தீர்வுகாண்முறை என்று பெயர் பெறும் அறிவியல் முறையிலும் இது சிறப்பிடம் பெறுவது. பா. scientific method. (இய)

proboscis - 1. குழல்வாய்: புறத்தே உள்ள வாயுறுப்பு. நீண்ட சுருண் டுள்ளது. எ-டு வண்ணத்துப் பூச்சியில் தேனை உறிஞ்சும் உறுப்பு. 2. யானையின் துதிக்கை. (உயி)

procambium - முன் அடுக்கியம்: வளர்திசு. வேர், தண்டு ஆகிய வற்றின் முனை வளர்திசுக்களால் தோற்றுவிக்கப்படுவது. (உயி)

procedure - செய்முறை: 1. ஒரு நிகழ்நிரலில் வழக்கமாக நடைபெறுஞ் செயல். இது கணிப்பொறிக்குக் குறிப்பிட்ட வேலை செய்யுமாறு கட்டளைகளைப் பிறப்பிக்க வல்லது. 2. ஆய்வு செய்வதற்குரிய வழிமுறை (இய)