பக்கம்:அறிவியல் அகராதி.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pro

349

pes


உணவுப்பொருள்களில் உள்ளது. (உயி)

protein synthesis - புரதத் தொகுப்பு: பகுதி உறுப்பான அமினோகாடியிலிருந்து உயிரணுக்கள் புரதம் உருவாக்கும் முறை. இதனைக் கட்டுப்படுத்துவது டி.என்.ஏ (உயி)

prothallus - முதல் தண்டகம்: கருப்பயிர். பெரணியில் இது சிதலினால் உண்டாக்கப்படுவது. இதயவடிவத்திலும் பசுமையாகவும் மெலிந்தும் தட்டையாகவும் இருக்கும். நிலைப்பளிக்க வேரிகள் உண்டு. ஆணியம், பெண்ணியம் என்னும் இரு வகைப் பால் இனப்பெருக்க உறுப்புகள் உண்டு. கருப்பயிர்த் தலைமுறையை உண்டாக்குவது. பா. gametophyte. (உயி)

protochordates - முதுகுத் முன்னோடி தண்டுடையன: கீழின முதுகுத்தண்டு உயிரிகளின் தொகுதிப்பெயர். இவற்றில் அடங்குவன தலைமுதுகுத்தண்டு உயிரிகள், தொடக்க நிலை முதுகுத்தண்டு உயிரிகள், வால் முதுகுத்தண்டு உயிரிகள். (உயி)

proton - முன்னணு: நேர்மின்னேற்ற நிலைத்த அடிப்படைத்துகள். எல்லா அணுக்களின் உட்கருவின் ஆக்கப்பகுதி. இதன் பொரு i ûU 1.67 x 10:-27 கி.கி. மின்னேற்றம் 16 x 10-19 கூலும், நேர்ஏற்ற அணு என்றுங்கூறலாம். (வேதி)

proton number - முன்னணு எண்: அணு எண். உட்கருவிலுள்ள முன்னணுக்களின் எண்ணிக்கை. (வேதி)

protonema - முன்னிழை: கிளைத்த இழை. மாசிச்சிதல் முளைத்து உண்டாக்குவது. இந்த அரும்புகளிலிருந்து மாசித் தாவரம் தோன்றுவது. ஒ. protalus. (உயி)

protoplasm - முன்கணியம்: உயிரணுவின் இழுதுபோன்ற பொருள். உயிரியின் இயற்பியல் அடிப்படை கண்ணறைக்கணியம் (சைட்டோ பிளாசம்), உட்கரு, கண்ணறைச் சவர், கண்ணறைப் படலம் முதலிய பகுதிகளைக் கொண்டது. பா. cell. (உயி)

protoplast - முன்கணிகம்: கண்ணறைச்சுவர் நீங்கிய தாவரக் கண்ணறையின் முதல் கணியம். (உயி)

protozoa - முதல்தோன்றிகள்: ஓரணு கொண்ட நுண்ணிய கண்ணறையே (செல்லே) எல்லா வேலைகளையும் செய்கிறது. முன்தோன்றிகள் என்றுங்கூறலாம். எ-டு அமீபா, பரமேசியம், பிளாஸ்மோடியம். (உயி)

peseudopodium - போலிக்கால்: அமீபா முதலிய ஒரணு உயிரிகள் தங்கள் உணவைப் பற்ற அல்லது நகரத் தற்காலிகமாக உண்டாக்கும் முதல்கணிய (புரோட்டோ பிளாச) நீட்சிகள். (உயி)