பக்கம்:அறிவியல் அகராதி.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

PSLV

350

pul



PSLV, polar satellite launch vehicle - பிஎஸ்எல்வி: போலார் சேட்டிலைட் லாஞ்ச் வெகிகிள். முனை வெளி நிலா ஏவுகலம், முநிஏக: இந்தியா மூன்று கலங் களை ஏவியது. 1993இல் பிஎஸ் எல்வி டி ஏவப்பட்டது. தோல்வி 1994 அக்டோபர் 1இல் பிஎஸ் எல்வி டி2 ஐஆர்எஸ்2யைச் சுற்று வழியில் விட்டது. 1996 மார்ச் 21இல் பிஎஸ்எல்வி ஐ ஆர்எஸ்3 ஐ சுற்று வழியில் விட்டது. இந்த ஏவுகணை அமைக்கச் செலவு 55 கோடி எரிபொருள் எடை 175 டன். ஏவுகணையின் எடை 253 டன். உயரம் 44.மீ. இது இந்தியா வின் 1ஆவது ஏவுகலம் (இய)

psychology - உளவியல்: மனித நடத்தையை ஆராயுந்துறை. பல வகைப்படும்.

psychotherapy - உளப்பண்டுவம்: உளநோய்களைப் போக்கும் முறை. இந்நோய்கள் உளக் கோளாறுகளால் ஏற்படுபவை. அறிதுயில், கருத்தேற்றம், மருந்து முதலியவை உளநோய்களைப் போக்கப் பயன்படுபவை. (மரு)

pteridology - பெரணிஇயல்: பெரணிகளை ஆராயுந்துறை. (உயி)

pteridophyta - பெரணி: இவற்றிற்குக் குறிப்பிடக்கூடிய இலை, தண்டு, வேர் என்னும் உறுப்பு வேறுபாடு உண்டு. இவ்வுறுப்புகளில் மரத்திசுவும் பட்டைத் திசுவும் இருக்கும். இலைகள் ஒளிச்சேர்க்தை நடத்துபவை. இலைகளின் அடியில் சிதல்கள் இருக்கும். இவற்றின் வாழ்க்கைச் சுற்றில் தலைமுறை மாற்றம் உண்டு. (உயி)

Ptolemaic astronomy - தாலமி வானவியல்: கிமு மூன்றாம் நூற்றாண்டில் பெர்காவைச் சார்ந்த அப்போலினியஸ் முதன் முதலாக முன்மொழிந்து, அலெக்சாண்டிரியாவைச் சார்ந்த கிளாடியஸ் தாலமியால் (100-178 கிபி) நிறைவு செய்யப்பெற்ற வானதுல்துறை. விண்ணகத்தின் மையம் புவி என்பது இதன் மையக் கருத்து. இது தவறு. கதிரவன் மையம் என்பதே உண்மையான கருத்து. (வாணி)

ptyxis - இளநிலை மடிவு: பா.vernation (உயி)

puberty - பருவமுதிர்ச்சி: பால் முதிர்ச்சியடைதல்.

pubes - முதிர்ச்சி மயிர்கள்: முதிர்ச்சியின் பொழுது பிறப்புறுப்புகளைச் சுற்றி மயிர்கள் முளைத்தல். (உயி)

pubis - இடுப்பு முன்னெலும்பு: மனிதனிடத்து இடுப்பெலும்பின் பகுதி. இடுப்பெலும்பின் முன் வளைவை உண்டாக்குவது. (உயி)

pulley - கப்பி: ஒர் அச்சில் தங்கு தடையின்றிச் சுழலக்கூடிய ஒர் உருளை கப்பியாகும். இது நிலைக்கப்பி, இயங்கு கப்பி என இருவகைப்படும். முன்னதில் எந்திர இலாபம் - 1. பின்னதில், எந்திர இலாபம் - 2. கப்பிகள்