பக்கம்:அறிவியல் அகராதி.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pul

16

pup

சேர்ந்தது கப்பித்தொகுதி ஆகும். இதுவும் நிலைக்கப்பித் தொகுதி, இயங்குகப்பித் தொகுதி என இருவகைப்படும். பொதுவாக, இவை நீர் இறைக்கவும் பளு தூக்கவும் பயன்படுபவை. (இய)

pulley and belt-கப்பியும் பட்டையும்: ஒரு தண்டிலிருந்து மற்றொரு தண்டிற்குத் திருப்பு விசையினைச் செலுத்தும் எந்திர ஏற்பாடு. (இய)

pulmonary artery-நுரையீரல் தமனி: உயிர்வளியற்ற குருதியை இதய வலது கீழறையிலிருந்து நுரையீரலுக்கு எடுத்துச் செல்லுங் குழாய். (உயி)

pulmonary vein-நுரையீரல் சிரை: இரட்டைச்சிரை, உயிர் வளிக்குருதியை நுரையீரலிலிருந்து இடது மேலறைக்கு எடுத்துச் செல்வது. (உயி)

pulp cavity-பற்கூழ்க்குழி: பல்லின் மைய உள்ளகம். தந்தினியால் சூழப்பட்டது. இதில் இழுதுபோன்ற இணைப்புத்திசு உண்டு. இத்திசுவில் குருதிக் குழாய்கள், கொழுநீர்க்குழாய்கள், நரம்புகள் ஆகியவை அமைந்திருக்கும். உயி)

pulsars-துடிமீன்கள்: துடிக்கும் விண்மீன்கள். புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்வை. 1967இலிருந்து ஆராயப்படுபவை. பல்சேட்டிங் ஸ்டார் என்பதன் சுருக்கம். (வாணி)

pulse-1 நாடித்துடிப்பு: இதயத் துடிப்பை ஒட்டித் தமனிச்சுவர்கள் விரிவதால் உண்டாகும் துடிப்பு. இதை மணிக்கட்டிலும் கணைக்காலிலும் உணரலாம். நோய் நிலைமை அறிய மருத்து வருக்கு முலமாக உள்ளது. இதயம் ஒரு நிமிடத்துக்கு 72 தடவைகள் துடிக்கிறது. எனவே, நாடித்துடிப்பும் ஒரு நிமிடத்து க்கு 72. 2. துடிப்பு: ஒரு மின் சுற்றிலுள்ள மின்னழுத்த அல் லது மினனோட்ட மாறுபாடு: குறுகிய நேரமே இருப்பது. இது மின்காந்த அலையிலும் இருக்கலாம். எ-டு. இலேசர் ஒளி. இத்துடிப்புக்குத் துல்லியமாக வரையறுக்கப்பட்ட வீச்சு உண்டு. (பது)

pulses-பருப்பு வகைகள்: உணவாகப் பயன்படுபவை. புரதச் சத்து மிக்கவை. பருப்பு விதைத் தாவரங்களிலிருந்து கிடைப்பவை. (உயி)

pulvinus-அதைப்பு: இலைக் காம்பிற்குக் கீழுள்ள மெத்தை போன்ற உப்பல். (உயி)

pumice-நுரைக்கல் பாறை: துளையுள்ள எரிமலைப்பாறை. (பு:அறி)

pump-எக்கி: ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு நீர்மம் செல்ல ஆற்றல் அளிக்கும கருவியமைப்பு. எ-டு மையவிலகு இறைக்கும் குழாய். (இய)

pupa-கூட்டுப்புழு: பூச்சிகளின் வாழ்க்கைச்சுற்றில் மூன்றாம் நிலை. இது ஓய்வு நிலைப் பருவம். உணவு உண்பதை நிறுத்தித்