பக்கம்:அறிவியல் அகராதி.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

qua

356

que


உயிரிகள் செல்வதைத் தடுக்கும் நடவடிக்கை (உயி),

quarantine flag - தொற்றுத் தடுப்புக்கொடி: தொற்றுத்தடுப்புக் கப்பலில் பறக்குங் கொடி. கரும்புள்ளியுள்ள மஞ்சள் நிறங் கொண்டது. கப்பலில் எவருக் கேனும் தொற்றுநோய் இருக்கு மானால், இக்கொடி பறக்க விடப்படும். (உயி)

quark-கருதுகோள்துகள்: கற்பனைத்துகள். அடிப்படைத் துகளின் கட்டுப்பொருளாக முன் மொழியப்பட்டுள்ளது. (இய)

quartz - குவார்ட்ஸ், கல்மம்: சிலிகாவின் இயற்கைப்படிக வடிவம் அறுகோணப் படிகங்கள். (வேதி)

quartz clock -கல்மக் கடிகாரம்: கல்மப்படிகத்தின் அழுத்த அடிப்படையில் வேலை செய்வது. ஒவ்வொரு கல்மப் படிகத்திற்கும் இயல்பு அதிர்வெண் உண்டு. இது அளவையும் வடிவத்தையும் பொறுத்தது. இக்கடிகாரங்கள் தற்பொழுது அதிகம் பயன்படு பவை (இய).

quartz lamp -கல்ம விளக்கு: பாதரச ஆவிவிளக்குகள். இதன் ஒளி ஊடுருவும் உறை படிகக் கல்லாலானது. சாதாரணக் கண்ணாடி உறிஞ்சும் புற ஊதாக் கதிர்களையும் வெளிப்படுத்த வல்லது (இய), quasars - தோற்றமீன்கள்: _விண் மீன்கள் போன்று தோன்றுபவை. குவாசி ஸ்டெல்லார் ஆப்ஜக்ட் என்பதன் சுருக்கம். விண்மீன் மண்டலத்திற்கு அப்பால் உள்ளவை. கதிர்வீச்சுக்கு மூலமாக இருப்பவை. இதுவரை அறியப்பட்ட பொருள்களில் மிகு தொலைவிலுள்ளவை அதிகச் செம்பெயர்ச்சியும் மிக்க ஒளியும் கொண்டவை. பா.pulsars.

queen - அரசி: எறும்பு, தேனி, கறையான் முதலிய சமூகப்பூச்சி களின் தலைவி. இனப்பெருக்கம் செய்யக்கூடிய பெண். (உயி)

quenching -பற்றுத்தணிப்பு: கெய்கர் எண்ணியில் பற்றல் மீண்டும் ஏற்படாதவாறு தடுத்து மின்னேற்றத்தை நீக்குதல், (இய)

quenching of steel - எஃகு த்தனிப்பு: காய்ச்சிய எஃகை விரைவாகக் குளிரச் செய்ய, நீரில் அல்லது எண்ணெயில் தோய்த்தல். (வேதி)

quetzal -குயிட்சால்: அமெரிக்காவைச் சார்ந்த பறவை. பொன் பசு நிறமுள்ளது. நீண்ட வால் இறகுகள் உண்டு. (உயி)

queue - ஒழுங்குவரிசை: புகை வண்டி நிலையம் முதலிய இடங்களில் நேர்வரிசையில் ஒருவர் பின் ஒருவர் நின்று பயணச்சீட்டுகளைப் பெறுதல் 2. தங்கவரிசை கணிப்பொறி நினைவகத்திலுள்ள தகவல் பின் தங்குவரிசை. பிஃபோ நெறி முறையில் செயலாக்கப்படுவது. முதலில் வருவதே முதலில் போக வேண்டும் என்னும் நெறிமுறை