பக்கம்:அறிவியல் அகராதி.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

qui

357

rad


இது. (ப.து)

quick lime - சுட்ட சுண்ணாம்பு: கால்சியம் ஆக்சைடு (வேதி)

quiescent - ஒடுக்க நிலை: ஓர் உயிரி இயக்கமற்று ஒய்ந்திருக்கும் உண்ணாநிலை, எ-டு கூட்டுப்புழு. (உயி)

quinine- குயினைன்: C20H24O2N23H2O. மிகக்கசப்பான படிகக் காரமம். நிறமற்றது. மணமற்றது. சின்கோனா மரப்பட்டையிலிருந்து பெறப்படுவது. மலேரியாவிற்குப் பலனளிக்கும் மருந்து (வேதி)

quinquivalent - ஐந்து இணை திறன் கொண்ட: (வேதி)

q-unit - குயூ அலகு: சேமிப்பு எரிபொருள்களின் வெப்ப ஆற்றலை அளக்கப் பயன்படும் அலகு (ஜூல்கள்) (இய)

q-value-குயூ மதிப்பு: அணு உலையில் வெளியாகும் ஆற்றலின் அளவு (இய)

q-wave - குயூ அலை: மேற்பரப்பலை. கிடைமட்ட அசைவுண்டு. அடர்த்தி அல்லது விறைப்பு எண்ணைப் பொறுத்து, அதன் நேர்விரைவு அமைதல் (இய)


R

rabies, hydrophobia - வெறி நாய்க்கடி, நீரச்சம்: நச்சியத்தினால் (வைரஸ்) உண்டாகும் கொடிய நோய். மூளையைத் தாக்குவது. தகுந்த ஊசிமுறைப் பண்டுவம் (14ஊசி) இல்லை என்றால் இறப்பு நிகழும். இதற்குப் பண்டுவம் கண்டறிந்தவர் லூயி பாஸ்டர் (உயி)

rachis - (ரேகிஸ்)-காம்பு: 1. கூட்டிலையின் காம்பு, இதில் சிற்றிலைகள் இருக்கும். 2. கோதுமைப் பூக்கொத்தின் மையஅச்சு (உயி)

rad - ரேடு: அலகுச்சொல். திசு முதலியவற்றால் வெளியிடப்படும் கதிர்வீச்சிலிருந்து உண்டாகும் ஆற்றலை அளக்கும் அளவு. (இய)

radar, radio detection and ranging - ரேடார், வானொலி பால் இடமறிதலும் எல்லை காணலும்: இது ஒரு மின்னனுக் கருவியமைப்பு. வானவூர்தி, செயற்கை நிலாக்கள் முதலியவற்றின் இருப்பிடத்தை அறியவும், தொலைவு, நிலநேர்க்கோடு ஆகியவற்றை அளக்கவும் பயன்படுவது. வானொலி அதிர்வெண் ஆற்றலை அனுப்பி, எதிரொளிப்பதன் மூலம் இச்செயல்கள் நடைபெறுகின்றன. சோனார், இலேசர், மேசர் போன்று இது ஒரு தலைப்பெழுத்துச் சுருக்கம். (இய)

radial symmetry - ஆரச்சமச்சீர்: ஒரு பொதுமையத்தை சுற்றியமைந்துள்ள ஒத்த பகுதிகளை எச்செங்குத்துக் கோட்டில் வெட்டினாலும், அவற்றை இரு சம பகுதிகளாகப் பிரிக்கலாம். எ-டு செம்பருத்தி, நட்சத்திர மீன். பா. (உயி)