பக்கம்:அறிவியல் அகராதி.pdf/368

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ref

366

rel

விக்கும் பொருள். எ-டு. நீர்ம உயிர்வளி, அம்மோனியா, கந்தக ஈராக்சைடு.(இய)

refrigeration - குளிராக்கல் : செம்பழுப்பாகக் காய்ச்சிய இரும்பை நீரில் அமிழ்த்துக. உடன் நீரின் வெப்பநிலை உயரும். இரும்பு வெப்பம் இழக்கும். இந்நெறி முறையின் அடிப்படையில் குளிராக்கல் நடைபெறுகிறது. குளிராக்கியிலுள்ள நீர்மம் தொடர்ந்து ஆவியாவதால், அதில் வெளியிலுள்ள வெப்ப நிலையை விட உள் வெப்பநிலை குறைவாக இருக்கும். நீர்மம் ஆவியாகும்பொழுது, சுற்றுப்புறத்திலுள்ள வெப்பத்தை இது உட்கவர்கிறது. (இய)

refrigerator - குளிராக்கி : குளிரூட்டி குறைந்த வெப்பநிலையினை உண்டாக்கி, அதனை நிலைக்க வைக்குங் கருவி. வீடுகளிலும் மருந்தகங்களிலும் பொருள்களைக் குளிர்ச்சியாக வைக்க உதவுவது. (இய)

regeneration - மீட்பாக்கம் : 1.மறுபிறப்பு 2. இழந்த பகுதிகளை மீட்டல். இது உயர்வகைத் தாவரங்களிலும் சில விலங்குகளிலும் காணப்படுவது. மரத்தில் கிளையை வெட்ட வெட்டிய இடத்திற்கருகில் துளிர் உண்டாகிக் கிளைக்கும். கடற்பஞ்சு, நீரி (அய்டிரா முதலிய விலங்குகளும் இவ்வாற்றல் கொண்டவை. (உயி)

relative - ஒப்பு - ஒப்படர்த்தி 2. சார் : சார்புக் கொள்கை, ஒ.absolute (இய)

relative density - ஒப்படர்த்தி, குறிப்பிட்ட வெப்பநிலையில், ஒரு பொருளின் அடர்த்திக்கும் நீரின் அடர்த்திக்குமுள்ள வீதம் அல்லது ஒரு க.செ.மீ. பொருளின் எடைக்கும் ஒரு க.செ.மீ. நீரின் எடைக்குமுள்ள வீதம். இது வெறும எண். எ.டு. நீரின் அடர்த்தி எண். 1. பாதரசம் 13.6 இது பொருள்களுக்கேற்ப மாறுபடுவது. ஒ.density (இய)

relative humidity - ஒப்பு ஈரநிலை : RH ஒரே வெப்பநிலையிலும் அழுத்தத்திலும், காற்றின் நிறைவான ஈரநிலைக்கும் காற்றிலுள்ள ஈர நிலைக்குமுள்ள வீதம். இது நூற்று விழுக்காட்டில் தெரிவிக்கப்படுவது. இதனைக் கண்டறியப் பயன்படுங் கருவி ஈரநிலைமானி. இதை ஆராயுந்துறை ஈரநிலை அளவியல். இதன் அடிப்படையில் பனி, மறைபனி, மூடுபனி, உறைபனி முதலியவை உண்டாதல் (இய)

relativity, theory of - சார்புக்கொள்கை : அழியாப்புகழ் பெற்ற இயற்பியல் கொள்கை, ஐன்ஸ்டின் உருவாக்கியது. நியூட்டன் விசை இயலின் திரிபுகளை விளக்க, இயக்கத் தொடர்பான பல கொள்கைகள், முன் மொழியப்பட்டன. அவை மீவுயர் சார்பு இயக்கம் பற்றியவை, அவற்றில் இரண்டு ஐன்ஸ்டின் உருவாக்கியது.