பக்கம்:அறிவியல் அகராதி.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rem

368

rep


remote sensing-தொலையறிதல்: தொலையுணர்தல். இது ஒரு பயனுறு அறிவியல், பல நன்மைகளை மனித குலத்திற்கு அளித்து வருவது. அவை வானிலை முன்னறிவிப்பு, கனிவளங்காணல் முதலியவை ஆகும். செய்திகள் வானொலி அல்லது ரேடார் மூலம் திரட்டப்படுகிறது. (இய)

renal portal system-சிறுநீரக வாயில் மண்டலம்: இது சிரை வழியாகும். இதில சிறுநீரக வாயில் சிரைகள் அடங்கி உள்ளன. இச்சிரைகள் வாலிலுள்ள அல்லது பின்புறத்துறுப்புகளிலுள்ள தந்துகிகளிலிருந்து குருதியைச் சிறுநீரகத்திலுள்ள தந்துகிகளுக்கு எடுத்துச் செல்பவை. குருதி, பின், சிறுநீரகச் சிரைகள் வழியாகச் சிறுநீரகத்தை விட்டு இதயத்திற்கு வருகிறது. (உயி)

renewable energy-புதுப்பிக்கும் ஆற்றல்: இதில் காற்று, ஒளி, நீர், ஆகிய மூன்றும் அடங்கும். இவை நிலைத்த ஆற்றல் ஊற்றுகள். இவற்றோடு காடுகளும் தாவரங்களும் சேரும். இந்த ஆற்றலைப் பயன்படுத்தத் தற்பொழுது அதிக நாட்டம் செலுத்தப்பட்டு வருகிறது. எ-டு காற்றாலை, கதிரவன் ஆற்றல் மின்கலம்.

reniform-சிறுநீரக வடிவம், அவரைவிதை வடிவம்: இலைப் பரப்பு இவ்வடிவத்தில் இருத்தல். எ-டு செண்டிலா. (உயி)

repellant-விரட்டி: சுவையற்றதும் அருவருக்கத் தக்கதுமான வேதிப்பொருள். கொசு முதலிய நோய் நுண்ணங்களை விலக்கப் பயன்படுவது. (வேதி)

replacing bone-மாற்றீட்டு எலும்பு: குருத்தெலும்பு (உயி)

replica-மறுபகர்ப்பு: ஓர் உயிரியல் மாதிரியின் மெலிந்ததும் விளக்கமானதுமான நகல். பிளாஸ்டிக்கும் கரியும் சேர்ந்த படலத்தை மேற்பரப்பில் தெளித்துப் பெறலாம். இப்பகர்ப்புகள் மின்னணு நுண்ணோக்கிப் பணியில் பயன்படுவது. (உயி)

replication-மறுபகர்ப்பாக்கல்: நகலாக்கல். மரபணுப்பொருளின் துல்லியபடிகளை எடுக்கும் நுட்பம். இதைக் கொண்டு டிஎன்ஏ, ஆர்என்ஏ ஆகியவற்றின் நகல்களை எடுக்கலாம். (உயி)

repression-ஒடுக்கல்: ஒருவகை உளவியல் பாதுகாப்பு. தான் ஏற்க இயலாத எழுச்சிப் பட்டறிவுகள், நினைவுத் திரட்டுகள் ஆகியவற்றைத் தனியாள் நினைவுள்ளத்திலிருந்து நீக்கி, நனவிலி உள்ளத்திற்கு மாற்றுதல், கவலை, அச்சம் முதலிய வடிவங்களில் தனியாளினால் இச்செயல் உணரப்பட்டு நடத்தை மாற்றம் பெறும். (உயி)

reproduction-இனப்பெருக்கம்: ஆண் அணு, பெண் அணுவுடன் சேர்வதால் கருவணு உண்டாகி உயிர் தோன்றுதல். இது எல்லா உயிர்க்கும் பொதுவான ஓர்