பக்கம்:அறிவியல் அகராதி.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

res

16

ret


திருத்தப்படுகிறது, கேட்கும் நிலை பெறுகிறது. (இய),

respiration-மூச்சுவிடுதல்: உயிரிக்கும் சூழ்நிலைக்குமிடையே உயிர்வளியும் கரி ஈராக்சைடும் பரிமாற்றம் செய்யப்படுகின்றன அல்லது குருதிக்கும் திசுக்களுக்குமிடையே நடைபெறும் வளிமாற்றம் குறிப்பாக, இது திசுக்களில் நடைபெறும் உயிர்வளி மாற்றம். இதில் உள்மூச்சு, வெளி மூச்சு என்னும் இரு செயல்கள் உள்ளன. (உயி)

respiratory organ-மூச்சுறுப்பு: நுரையீரல்.கரி ஈராக்சைடும் உயிர்வளியும் பரிமாற்றம் செய்யப்படும் இடம்

respiratory pigment-மூச்சுநொதி: உயிர்வளியுள்ள நிறக்கூட்டுப்பொருள். (உயி)

respiratory quotient-மூச்சுஈவு: மூச்சு விடுதலின் பொழுது செலவழிந்த உயிர்வளிப் பருமனுக்கும் உண்டாகும் கரி ஈராக்சைடு பருமனுக்குமுள்ள வீதம். இது வழக்கமாக 0.8 (உயி)

response-துலங்கல்: சூழ்நிலையில் ஏற்படும் மாற்றத்திற்கேற்பத் தூண்டலால் உண்டாகும் வினை. மறிவினை சார்ந்தது. தூண்டல் துலங்கல் இல்லையேல் உயிர் இயக்கம் இராது. வளர்சிதை மாற்றம், உயிர்த்தல் முதலியவை போன்று இதுவும் ஓர் அடிப்படைச் செயலே. (உயி)

rest-1.ஓய்வு: வேலையினால் உடல் தளர்ச்சி ஏற்படும் பொழுது, அதிலிருந்து நீங்கி இருத்தல். தளர்ச்சிக்குச் சிறந்த மருந்து ஓய்வே. ஆற்றல் செலவழிவதால் ஊட்டமுள்ள சுவைநீரும் அருந்தலாம். (உய) 2. அசையா நிலை: பொருளின் நிலைத்த நிலை. (இய)

retardation-எதிர்முடுக்கம்: இயங்குகின்ற பொருள் தடை ஏற்படும் பொழுது, விரைவுத் தளர்ச்சி அடைகிறது. புவியிலிருந்து மேல்நோக்கி எறியப்படும் எப்பொருளும் புவிஈர்ப்பு விசையினால் விரைவுத் தளர்ச்சி அடையும். இதை எதிர்முடுக்கம் என்கிறோம். ஒ. acceleration. (இய)

retention-நினைவிலிருத்தல்: நினைவுநிலை சார்ந்தது.பெற்ற செய்தியினை மறைநிலையில் நீண்ட காலம் இருத்தி வைத்தல், மீளாக்கம் (ரிபுரடக்ஷன்). நினைவுணரல், மீண்டும் மீண்டும் செய்தல் ஆகிய நினைவுக் குறிப்புகள் தொடர்பான செயல்களை உற்றுநோக்கியே இதனை மதிப்பிட வேண்டும். இது செறிவாக இருந்தால்தான், கற்றல் செம்மையாக அமையும். (க.உள)

reticulate-வலைப்பின்னல் நரம்பமைவு: மா முதலிய தாவரங்களில் நடுநரம்பு பல நரம்புகளை உண்டாக்குகிறது. இவை இலைப் பரப்பில் பலதிசைகளிலும் பரவி,வலைப்பின்னல் போல்