பக்கம்:அறிவியல் அகராதி.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rig

373

roa


rigor mortis -இறப்பு விறைப்பு: மனிதன் இறந்தபின் தசைகள் விறைத்துக் கடினமாதலே இறப்பு விறைப்பு. இது நிகழ்ந்த பின் கைகால்களை மடக்க இயலாது. திறந்த வாயை மூட இயலாது. எனவேதான், மனிதன் இறந்த பின் கைக்கட்டு, கால்கட்டு வாய்க்கட்டு போடப்படுகிறான். தசை நார்களில் அடினோசைன் முப்பாஸ்பேட்டு தீர்வதால், இந்நிலை ஏற்படுதல். (உயி)

ring - வளையம்: ஒரு மூலக்கூறிலுள்ள அணுக்களின் மூடிய தொடர் (வேதி)

ring compound -வளையச்சேர்மம்: வேதிச்சேர்மத்தின் மூலக்கூறில் சில அல்லது எல்லா அணுக்களும் மூடிய வளையத்தோடு இணைந்திருக்கும். இத்தகைய சேர்மம் வளையச்சேர்மமாகும். (வேதி)

Rio-Earth Summit -ரியோ புவி உச்சி மாநாடு: 1992இல் உலக அளவில் ஐ.நா சார்பாகப் பிரேசிலில் நடந்த சூழ்நிலைப் பாதுகாப்பு மாநாடு.

ripple-1, அலை, 2 அலையாக்கி: அலைகளை உருவாக்குங் கருவி. (இய)

rivers-ஆறுகள்:ஓடும் நீரே ஆறு இவை வற்றும் ஆறுகள், வற்றாத ஆறுகள் என இருவகைப்படும். இவை இளநிலை, முதிர்நிலை, மூப்புநிலை என மூன்று நிலைகளைக் கொண்டவை. ஆற்று அரிப்பினால் பள்ளத்தாக்குகள்,நீர் வீழ்ச்சிகள் முதலியவை உண்டாகின்றன. (பு:அறி)

RNA, ribo nucleic acid - ஆர்என்ஏ, ரிபோ நியூக்கிளிகக் காடி: இஃது உட்கருக்காடிகளில் ஒன்று. ஒரு புரியில் உள்ளது. இதில் பெண்டோஸ் சர்க்கரை ரிபோஸ், பாசுவரிகக்காடி வேற்று வளைய நான்கு படி மூலிகள் ஆகிய பகுதிகள் உள்ளன. இது. முதன்மையாக, கண்ணறைக் கணியத்தில் காணப்படுவது. புரதத்தொகுப்பிற்குக் காரணமானது. டிஎன்ஏ கட்டுப்பாட்டில் வேலை செய்வது. இதன் மூன்று வகைகளாவன. 1. தூது ஆர்என்ஏ 2. ரிபோசோம் ஆர்என்ஏ 3. மாற்றும் ஆர்.என்.ஏ. பா. DNA (உயி)

roasting-வறுத்தல்: உலோகத்தைப் பிரித்தலுக்கு முன், தாது காற்றில் சூடாக்கப்படுதல். இதனால் அதிலுள்ள மாசுகள் நீங்குவதால், அடுத்தநிலையை மேற்கொள்ள எளிதாகும். ஆகவே, இது உலோகப்பிரிப்பு முறைகளில் ஒன்று. எ-டு இரும்பின் சல்பைடு. தாதுவை வறுக்க, அதிலுள்ள கந்தகம், கரி ஈராக்சைடு, சவ்வீரம் ஆகிய மாசுகள் ஆவியாகி நீங்கும். இதனால் அடுத்து ஒடுக்கல் எளிதாக நடைபெறும்.

துத்தசல்பைடு +ஆக்சிஜன் …Δ→ துத்த ஆக்சைடு + கந்தக ஈராக்சைடு ↑

2ZnS + 3O2Δ→2ZnO +2SO2