பக்கம்:அறிவியல் அகராதி.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

roc

375

rot


rocket propulsion - ஏவுகணை முன்னியக்கம்: ஏவுகணையின் எரியறையில் பின்புறம் மட்டுமே பீச்சும் குழல் இருக்கும். இவ்வறையில் எரிபொருள் எரியும் பொழுது மீயழுத்தத்துடன் வளிகள் உண்டாகும். இவை குறுங்குழலின் வழியாக வெளியேறுவதால் உருவாகும் பின்னோக்கு இறுக்கு விசைக்கு இணையாக எதிர்த்திசையில் உண்டாகும். முன்னோக்கு இறுக்குவிசை அதை முன்நோக்கிச் செல்லுமாறு செய்யும். நியூட்டனின் மூன்றாம் இயக்க விதியின் அடிப்படையில் ஏவுகணை இயங்குவது. பா. recol (இய)

rodents - கொறிப்பிகள்: கொறிக்கும் விலங்குகள். பாலூட்டிகளுமாகும். தொடர்ந்து வளரக் கூடிய உளிபோன்ற சுரண்டும் பற்கள் 4 உண்டு. இவற்றில் 2 மேல்தாடையிலும் 2 கீழ்த்தாடையிலும் இருக்கும். எ-டு அணில், எலி, (உயி)

roe - மீன்முட்டை: கருப்பைப் படலத்தில் தொகுதியாக உள்ள மீன் முட்டைகள், 2. செம்மான் நன்றாக ஓடக் கூடிய அழகிய மான். (உயி)

Roentgen rays - ராண்ட்ஜன் கதிர்கள்: பா. x-rays. (இய)

roentgen - ராண்ட்ஜன்: R. அலகுச் சொல். அயனிவயமாகும் கதிர்வீச்சலகு. (இய)

Rohini-ரோகிணி: ஒர் உயராற்றல் அளவெடுப்பு இந்திய ஏவுகணை ஆர்எச் 560 எம்கே II. 9.4.97 அன்று ஷார் மையத்திலிருந்து ஏவப்பட்டது. ஆராய்ச்சி ஏவுகணை. முகப்பெடை 362 கி.கி. அடைந்த உயரம் 454 கி.மீ ரோகிணி வரிசையில் மிகப் பெரியது.

Rose's metal- ரோஸ் உலோகம்: உருகக் கூடிய உலோகக் கலவை. 50% பிஸ்மத், 28% காரீயம் மற்றும் வெள்ளியம் கொண்டது. குறைந்த உருகுநிலை 100 செ. தீப்பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுதல். (வேதி)

rotascope - சுழல்விரைவுநோக்கி: எந்திர விரைவு இயக்கத்தை உற்றுநோக்கப் பயன்படுங் கருவி. (இய)

rotation of crop - பயிற்சுழற்சி: மாற்றுப் பயிரிடல். ஒரே பயிரைச் சாகுபடி செய்வதால் நிலத்திலுள்ள உப்புகள் தீர்ந்து அதன் வளம் நீங்கும். இவ்வாறு வளம் நீங்கிய நிலம் களைத்த நிலமாகும். இதைப்போக்க மாற்றுப் பயிரிடல் சிறந்த முறை. நமது நிலத்தில் முதல் பருவம் ஒரு பயிரும் (கடலை அடுத்த பருவம் வேறு பயிரும் (பயிறு) சாகுபடி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். (உயி)

rotor சுழலி: மின்உந்தி (மோட்டார்), மின்இயக்கி (டையனமோ), மின்இயற்றி ஜெனரேட்டர்) ஆகியவற்றின் சுழலும் பகுதி. இது ஒரு கவரகமே