பக்கம்:அறிவியல் அகராதி.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sat

380

sca


உலக அளவில் செய்திகளை அறிதல், பகிர்ந்து கொள்ளுதல். இன்று வெற்றிதரும் வகையில் நடைபெறுவது. டெல்ஸ்டார். இன்சட் 2. வானிலை நிலாக்கள்: உலக அளவில் வானிலைச் செய்திகளை அறிந்து பகிர்ந்தளித்தல். இதுவும் இன்று நன்கு நடைபெறுகிறது. டிராஸ், இன்சட் 3. ஆராய்ச்சி நிலாக்கள்: விண்வெளியை விரிவாக ஆராயும் நிலாக்கள். டிஸ்கவரர், வேன்கார்டு, அப்பல்லோ, ரோசட். எல்லா வகைக் கருவிகளும் ஒரு செயற்கை நிலாவில் அமைந்து, அது சிறந்த ஆய்வுக்கூடமாக வானவெளியில் விளங்குவது தனிச்சிறப்பு. அதிலுள்ள கருவிகள் எல்லாம் தாமே இயங்கிச் செய்திகளைத் திரட்டிப் புவிக்கு அனுப்புபவை. (வா.அ.)

ஒரு கணக்கு: 1957- 2000 வரை 43 ஆண்டுக்கால வான வெளி வரலாற்றில் 2400க்கு மேற்பட்ட செயற்கை நிலாக்கள் ஏவப்பட்டுள்ளன. இவற்றில் 70க்கு மேற்பட்ட நிலாக்கள் மனிதனை ஏற்றிச் சென்றன. 12 அமெரிக்க வீரர்கள் திங்களில் நடந்துள்ளனர். 20க்கு மேற்பட்ட வானவெளி வீரர்கள் புவியை வலம் வந்துள்ளனர். (இய)

satellite DNA - துணை டிஎன்ஏ: டிஎன்ஏவின் ஒரு பகுதி. (உயி)

saturated colour - நிறைவுறுநிறம்: வெள்ளைநிறத்தால மாசுறாத துயநிறம். (இய)

saturated compound - நிறைவுறு சேர்மம்: கட்டவிழ் இணைதிறன்களில்லாத கரிமச் சேர்மம். இதில் பதிவீட்டுச் செயலினால் அணுக்கள் சேர்தல் நடைபெறுகின்றன. (வேதி)

saturated solution - நிறைவுறு கரைசல்: குறிப்பிட்ட வெப்ப நிலையிலும் அழுத்தத்திலும் பெரும அளவு கரைபொருள் கரையக்கூடிய கரைசல். (வேதி)

Saturn - சனி: வியாழன், யுரேனஸ் ஆகிய இரு கோள்களுக்கிடையே சுற்றுவழியமைந்த கோள். வளையங்களைக் கொண்டுள்ளது தனிச்சிறப்பு. அமெரிக்கக் கோள் துருவி பயணியர், வாயேஜர், ஆகியவை இக்கோளை ஆராய்ந்துள்ளன. 17 நிலாக்கள் உண்டு. அவற்றில் பெரியது டைட்டான். (வாணி)

scabies - சொறிசிரங்கு: அரிப் புண்ணியால் ஏற்படும் அதிகம் தொற்றக்கூடிய தோல்நோய். கந்தகக் களிம்பு மருந்து தடவலாம். ஊசியும் போட்டுக் கொள்ளலாம். (உயி)

scalar quantity- அளவுசார்அளவு: திசை சிறப்பாகக் கொள்ளப்படாத அளவு. தொலைவு எ-டு ஒ. vector quantity.

scale - 1. அளவுகோல்: ஆய்வுக் கூடக் கருவி. 2. செதில்: மீன், பூக்கள் ஆகியவற்றில் காணப் படுவது. (ப.து)

scale formation - செதில்படிதல்: