பக்கம்:அறிவியல் அகராதி.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sec

385

seg


நிலை மின்கலம்: துணை மின்கலம். (இய)

secondary colours - இரண்டாம் நிலை நிறங்கள்: முதன்மை நிற இணைகளை கலப்பதால் தோன்றும் நிறங்கள். ஒ. primary colours. (இய)

secondary growth, secondary thickening - இரண்டாம் நிலை வளர்ச்சி: இரண்டாம் நிலை அல்லது பக்க ஆக்கு திசுக்களிலிருந்து உண்டாகும் வளர்ச்சி. இருவிதை இலைத் தாவரங்களுக்கே உரியது. இரண்டாம் நிலைத்தடிப்பு என்றும் பெயர். ஒ primary growth. (உயி)

secondary sexual characters - இரண்டாம் நிலைப் பால் பண்புகள்: பால் தொடர்புடைய விலங்குப் பண்புகள். இவை இனப்பெருக்க மண்டலத்தோடு தொடர்புடையவை அல்ல, எ-டு மீசை முளைத்தல், முலை உண்டாதல், ஆண் தவளையின் கலவித்திண்டு. (உயி)

secretion - சுரப்பு: உயிரணு உண்டாக்கும் நீர்மப் பொருள். குறிப்பிட்ட வேலையைச் செய்வது. எ-டு ஸ்டார்ச்சு செரிக்க உமிழ்நீர் உதவுகிறது.

section - வெட்டுப்பகுதி: நுண்ணோக்கியில் வைத்துப் பார்க்க வெட்டுப்படும் திசுவின் சிறிய துண்டு. (உயி)

sedative - தணிப்பி: தணிப்பு மருந்து. படபடப்பு. நடுக்கம் முதலியவற்றைக் குறைக்கும் மருந்து. (மரு)

sedimentation - வண்டல் படிதல்: மைய விலக்கியினாலோ ஈர்ப்பினாலோ தொங்கல் படிதல், துகள்களின் சராசரி அளவை மதிப்பிடப் படிதல் விரைவு பயன்படும். இந்நுணுக்கம், பெரு மூலக்கூறுகளின் சார்பு மூலக்கூறு நிறைகளைக் கான, மீமைய விலக்கி உதவியுடன் பயன்படுகிறது. (வேதி)

seed - 1.விதை: கருவுற்ற சூலே விதை; ஒரு விதை இலை, இரு விதை இலைத் தாவரங்களுக்கு மட்டுமே உரியது. 2. நுண்படிகம்: ஒரு கரைசல் வீழ்படிய நீர்மம் அல்லது வளியுடன் சேர்க்கப்படும் சிறிய படிகம்.

seed coat - விதையுறை: இது வெளியுறை, உள்ளுறை என இருவகைப்படும். சூலுறையின் புறப்பகுதியே வெளியுறை. அகப்பகுதி உள்ளுறை. ஒ. integument (உயி)

segment - துண்டம்: சிறுதுண்டு, துண்டம். (உயி)

segmentation - துண்டாதல்: பா.metamerism. (உயி)

segregation - தனித்துப்பிரித்தல்: மரபணுவியலில் இரு இணை மாற்றுகள் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிதல். இவை ஒவ்வொன்றும் இரட்டை நிறப்புரிகளில் ஒன்றை எடுத்துச் செல்லும். இந்நிகழ்ச்சி குன்றல்

அஅ 25