பக்கம்:அறிவியல் அகராதி.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sha

389

sho


இரு பாலணுக்களும் சேர்வதால், புதிய உயிர்கள் தோன்றும் முறை. உயிரின் அடிப்படைச் செயல்களில் ஒன்று. (உயி)

shadow - நிழல்: ஒளி ஊடுருவாப் பொருள். ஒளியைத் தடுக்கும் போது, ஒரு பரப்பில் உண்டாகும் இருட்டு. ஒளிமூலம் புள்ளியாக இருக்குமானால் நன்கு உறுதி செய்யப்பட்ட வெளிக் கோட்டினை நிழல் கொண்டிருக்கும். மூலம் குறிப்பிட்ட அளவு இருக்குமானால், நிழலில் இரு தெளிவான பகுதிகள் இருக்கும். ஒன்று முழு நிழல், மற்றொன்று அரைநிழல். கோள் மறைவில் இந்நிகழ்ச்சியுள்ளது. (இய)

shark - சுறா: பெரிய கடல்மீன், நீளம் 13.5 மீ. பெருந்தீனி வேட்கையுள்ளது. திட்டமான கறுப்பு சாம்பல் நிறத்தோல், மீன் உண்ணி, மனிதனையும் தாக்க வல்லது. (உயி)

shell - ஒடு: மீன் அல்லது ஆமை யின் கடின வெளிப்புற உறை. (உயி)

shellac - அரக்கு: பெண் அரக்குப் பூச்சி உண்டாக்கும் பிசின். இது இசைத்தட்டுகள் செய்யவும். நகை வெற்றிடங்களை நிரப்பவும் பயன்படுகிறது. (உயி)

sheradizing - துத்தநாகம் பூசல்: காற்றில்லாமல் துத்தநாகத்துளை வெப்பப்படுத்தித் துத்தநாகப் பூச்சு பூசுதல். இம்முறையைப் புனைந்தவர் ஷெராடு. வில் சுருள்கள், திருகாணிகள் முதலியவை செய்ய இம்முறை பயன் படுதல். இவை அரிமானத் தடையுள்ளவை. (வேதி)

shock wave - அதிர்ச்சி அலை: ஒரு பாய்மத்தில் உண்டாவது. உயரழுத்தமும் வெப்பநிலையுமுள்ள மிகக் குறுகிய பகுதி அல்லது மண்டலம். ஒரு நிலையான பொருளின் மீது மீவொலி நிலையில் பாய்மம் அல்லது வீழ்பொருள் ஒன்று செல்கின்ற பொழுது, இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. மின்னல் தாக்கு, குண்டுவெடிப்பு முதலிய அலைக் கழிவுச் செயல்களாலும் இவ்வலை உண்டாகும். (இய)

shoot - தண்டகம்: தண்டும் இலையும் சேர்ந்த பகுதி. தாவர உடல் அச்சின் மேல்பகுதி. தரைக்குமேல், நில ஈர்ப்பை எதிர்த்து வளர்வது, தண்டு, இலை, பூக்கள், ஆகியவை அடங்கியது. இது தண்டகத் தொகுதி. வேர்த் தொகுதி அச்சின் கீழ்ப் பகுதி. இது நில ஈர்ப்பு நோக்கி வளர்வது. இதில் ஆணிவேர், இரண்டாம் வேர், மூன்றாம் வேர் முதலியவை உள்ளன. (உயி)

short circuit - கிட்டச்சுற்று: இஃது இயல்பு மீறிய சுற்று. பக்க இணைப்பு, தொடர் இணைப்பு ஆகிய இரண்டிலும் ஏற்படுவது. காப்பிடப்பட்ட கம்பிகள் உறை நீங்கிய இடத்தில் சேருவதால் உண்டாகும் மின்னோட்ட வழி. உருகிகளைப் பயன்படுத்தல். கம்பிகளைக் காப்பிடுதல் ஆகிய