பக்கம்:அறிவியல் அகராதி.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sho

390

sig


வற்றின் வாயிலாகத் தடுக்கலாம். இதன் குறைகளாவன. 1. தீ நேர்ச்சி உண்டாதல் 2. வீணாக மின்சாரம் செலவழிதல். பா. circuit (இய)

shoulder girdle - தோள்வளையம்: பா. pectoral girdle. (உயி)

shunt - தடம்மாற்றி: ஒரு பகுதியை மற்றொரு பகுதியோடு பக்க இணைப்பில் சேர்த்து அச்சுற்றில் மின்னோட்டத்தைச் செலுத்துதல். ஆக மின்னோட்ட மானியுடன் பக்க இணைப்பில் இணைந்த குறைந்த தடை, இம்மானியின் எல்லையை மாற்ற இயலும். இத்தடையே தடம் மாற்றி. (இய)

Siamese twins - சியாமிய இரட்டையர்: ஒரு தனி உயிரணுவிலிருந்து உண்டாகிய இரு தனி உயிர்கள். பிறப்பிலிருந்து ஒரு தசைக் கயிற்றினால் பிணைக்கப் பட்டிருந்தவை. இச்சீன இரட்டையர் காலம் (1811 - 74) இது போன்று பிறக்கும் குழந்தைகளுக்கு இப்பெயர் வழங்குவது நடைமுறையில் உள்ளது. (உயி)

sibling - கால்வழி: ஒரே கலப்பிலிருந்து உண்டாகும் இரண்டு அல்லது மூன்று கால்வழிகள் சகோதரர்களும் சகோதரிகளும். (உயி)

sidereal time - விண்மீன் அளவு நேரம்: விண்மீன்களைக் கொண்டு அளக்கும் நேரம். (வானி)

side reaction - பக்கவினை: முதன்மை வினை போலவே நடக்கும் வேதிவினை. வரையறுக்கப்பட்ட அளவுக்கு நடைபெறுவது. (வேதி)

Siemen's process - சீமன் முறை: எஃகு உருவாக்கும திறந்த உலை முறை.

sieve elements - சல்லடைக் கூறுகள்: சல்லடைக் குழாய்களை உறையில் விதையுள்ள தாவரங்கள் உண்டாக்குபவை. (உயி)

sieve tube - சல்லடைக்குழாய்: சல்லடைக் கூறுகளால் உருவாவது. இதன் வழியாக உணவு செல்கிறது. (உயி)

sight, long - எட்டப்பார்வை: விழிக்கோளம் சுருங்குவதால், அருகிலுள்ள பொருள்களிலிருந்து வரும் ஒளிக் குவியம் விழித்திரைக்குப் பின் விழுகிறது. இதனால் அருகிலுள்ள பொருள்களை மட்டும் பார்க்க முடியும். இதைப் போக்க குவிவில்லையைப் பயன்படுத்த வேண்டும். (இய)

sight, short - கிட்டப்பார்வை: விழிக்கோளம் முன்னும் பின்னும் நீண்டு விடுவதால், தொலை பொருள்களிலிருந்து வரும் ஒளிக்குவியம் விழித் திரைக்கு முன் விழுகிறது. இதனால் தொலை பொருள்களைப் பார்க்க முடிவதில்லை. இதைப் போக்கக் குழிவில்லையைப் பயன்படுத்த வேண்டும். (இய)