பக்கம்:அறிவியல் அகராதி.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sil

392

sim


சிலிகன் சேர்மங்களில் ஒன்று. வெப்பத்திற்கும் நீருக்கும் தடையளிப்பது. உயவிடு பொருளாகவும் மெருகுப் பொருளாகவும் பயன்படுகிறது. (வேதி)

siliconising - சிலிகன் முலாம் பூசுதல்: உயர்ந்த வெப்பநிலையில் உலோகத்தில் சிலிகனைப் பரவச் செய்தல். (வேதி)

silicon oxide - சிலிகன் ஆம்சைடு: SiO2. இரு வேற்றுருக்கள் உண்டு. படிகமுள்ளது, படிகமற்றது. இரண்டும் நீரில் கரைந்து காடிகளைக் கொடுக்கும். கண்ணாடி செய்யவும் சிமெண்டு (படிகாரை) செய்யவும் பயன்படுகிறது. (வேதி)

silican steel - சிலிகன் எஃகு: சிலிகன் 05.4.5% கொண்ட எஃகு மின்மாற்றிச் சுருள்கள் செய்யப் பயன்படுதல். (வேதி)

silver - வெள்ளி: Ag. பளபளப்பான வெண்ணிற உலோகம். தகடாக்கலாம். கம்பியாக்கலாம். மின்சாரத்தையும் வெப்பத்தையும் எளிதில் கடத்துவது. உலோகமாகவும் உலோகத் தாதுவாகவும் கிடைத்தல், சல்பைடு, சல்பைடுதாது அர்ஜண்டைட்டு, குளோரைடு தாது கொம்பு வெள்ளி. நாணயங்கள், பாண்டங்கள். அணிகலன் முதலியவை செய்யப் பயன்படுகிறது. (வேதி)

silver bromide - வெள்ளிப் புரோமைடு: AgBr. வெளிறிய மஞ்சள் நிற வீழ்படிவு. கரையக் கூடிய புரோமைடை வெள்ளி நைட்ரேடுக் கரைசலுடன் சேர்த்துப் பெறலாம். ஒளிப்படத் தொழிலில் பயன்படுதல். (வேதி)

silver iodide - வெள்ளி அயோடைடு: AgI. வெளிறிய மஞ்சள் நிற வீழ்படிவு. வெள்ளி நைட்ரேட்டுக் கரைசலுடன் கரையக் கூடிய அயோடைடு கரைசலைச் சேர்த்துப் பெறலாம். ஒளிப்படத் தொழிலில் பயன்படுகிறது. (வேதி)

silver nitrate - வெள்ளி நைட்ரேட்டு: AgNO3. சாய் சதுரப் படிகங்கள். நிறமற்றவை. நீரற்றவை. நீரில் கரையக்கூடியவை. நீர்த்த நைட்ரிகக் காடியில் வெள்ளியைக் கரைத்து ஆவியாக்கிப் படிகமாக்க, இப்பொருள் கிடைக்கும்.

simple harmonic motion - தனிச்சீரிசை இயக்கம்: இயங்கும் பொருள் ஒன்றின் முடுக்கம், எப்போதும் ஒரு குறிப்பிட்ட புள்ளியை நோக்கியும், அப்புள்ளியிலிருந்து உள்ள தொலைவிற்கு நேர்வீதத்திலும் இருந்தால், அவ்வியக்கம் சீரிசை இயக்கம் என்று பெயர்பெறும். எ-டு தனி ஊசலின் அலைவுகள். (இய)

simple machine - தனி எந்திரம்: ஒரு கருவியில் ஓரிடத்தில் செயற்படும் விசை, வேறோரிடத்தில் அளவும் திசையும் மாறச் செயல்படுமானால், அது தனி எந்திரம். எ-டு நெம்புகோல், கப்பி சாய்தளம், செயற்படுத்தும் விசை திறன். திறனால் இயற்றப்படும் விசை எடை.