பக்கம்:அறிவியல் அகராதி.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

siz

394

sla


கொள்ளப்பட்டிருக்கும் அனைத்துலக அலகுமுறை. இதில் ஏழு அடிப்படை அலகுகள் உள்ளன. ஆம்பியர், காண்டலா, கெல்வின், கிலோகிராம், மீட்டர், மோல், வினாடி. இவ்வலகுகளைக் கொண்டு ஏனைய இயற்பியல் அளவுகளையும் வழியலகுகளாகப் பெறலாம். ஆக, அலகுகள் அடிப்படையலகுகள், வழியலகுகள் என இரு வகைப்படும். பா. base unit (இய‌)

sizing - பசையூட்டல்: எழுதுவதற்குப் பயன்படுத்தாள், நீர்மத்தை உறிஞ்சக் கூடியதாக இருக்கக் கூடாது. அதற்காக இதில் ஜெலாட்டின் என்னும் பசைப் பொருள் தாளில் துளைகளை அடைப்பதற்காகப் பூசப்படுகிறது. இம்முறைக்குப் பசையூட்டல் என்று பெயர். (வேதி)

skatole - ஸ்கேட்டேல்: C9H9N. கரையக்கூடிய வெண்ணிறப் படிகம். வீறுள்ள மணமுண்டு. நறுமணப் பொருள்கள் செய்யப் பயன்படுவது. (வேதி)

skeletal muscle - எலும்புத் தசை: வேறு பெயர்கள், வரியுள்ள தசை, இயங்குதசை. சட்டகத்தின் எலும்புகளை அசையச் செய்வது. மைய நரம்புமண்டலத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது. (உயி)

skeleton - எலும்புக்கூடு, சட்டகம்: தாங்குதலுக்காக விலங்குகளுக்குள்ள சட்டகம். இது புற எலும்புக்கூடு. அக எலும்புக்கூடு என இருவகைப்படும். பொதுவாக, முன்னது முதுகு எலும்பிலிகளுக்கும் பின்னது முதுகு எலும்பிகளுக்குமுண்டு. இதில் தலை, உடம்பு, புறத்துறுப்புகள் என்னும் உடல் பிரிவிற்கேற்ப எலும்புகள் அமைந்திருக்கும். (உயி)

skin - தோல்: உயிரிகளுக்கு இயற்கைப் போர்வையாக உள்ளது. இது புறத்தோல், அகத்தோல் என இரு பகுதிகளாக உள்ளது. இவ்விரு வகைத்தோல்களிலும் மேலும் பல பகுதிகள் உள்ளன. ஐம்பொறிகளில் பரப்பால் பெரியது தோல். உள்ளுறுப்புகளைப் பாதுகாக்கிறது. உடலின் வெப்பநிலையைச் சரிசெய்கிறது. வியர்வையைக் கழிவாக வெளியேற்றுகிறது. (உயி)

skull - தலை எலும்புக்கூடு: தலை எலும்புச் சட்டகம். மண்டை ஓட்டு எலும்புகளையும் முக எலும்புகளையும் கொண்டது. (உயி)

slag - கசடு: உலையில் உலோகத் தாதுக்களைப் பிரிக்கும்போது உண்டாகும் கழிவு. இது இளக்கியினால் உண்டாவது. இரும்பு அதன் தாதுவிலிருந்து பிரிக்கப்படும் போது, அத்தாதுவுடன் கல்கரி, சுண்ணாம்புக்கல் ஆகிய இரண்டும் சேர்க்கப்படுகின்றன. இவற்றில் கல்கரி ஒடுக்கி, சுண்ணம்புக்கல் இளக்கி. இதனால் உருகிய இரும்பின் மேல் கசடு மிதக்கும். இரும்பு ஒரு திறப்பின் வழியாகவும் கசடு மற்றொரு