பக்கம்:அறிவியல் அகராதி.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sno

396

sod


படுகோண சைன் வீதமும் விலகு கோண சைன் வீதமும் மாறா எண். இது ஒளிவிலகலின் இரண்டாம் விதி. (இய)

snoring - குறட்டை விடுதல்: உள் நாக்கு அதிர்வதால் இஃது உண்டாகிறது. உறங்கும் பொழுது வாயினால் முச்சுவிடுவதால் இது நடைபெறுகிறது. (உயி)

snow - பனி: காற்று வெப்பநிலை நீரின் உறைநிலைக்குக் கீழ் இருக்கும்போது, காற்று, நீராவி, படிகமாக உறைகிறது. இதுவே பனி ஒ. Smog, dew. (இய)

snowstorm -பனிப்புயல்: காற்று வெளியின் உயர் பகுதிகளில் உள்ள காற்று விரைந்து குளிர்ச்சி அடையும். இப்பொழுது அங்குள்ள நீராவியானது நேரடியாக உறைந்து பனிப்படிகங்கள் ஆகின்றன. இவையே பனிப்புயலுக்கு வழி வகுப்பவை. (இய)

soap - சவர்க்காரம்: உயர் கொழுப்புக் காடியின் காரஉப்பு. கழுவவும், துப்புரவு செய்யவும் பயன்படுதல். (வேதி)

soda - சோடா: வேதிப்பொருள். இருவகைப்படும். சலவைச் சோடா, சோடியம் கார்பனேட் சமையல் சோடா. சோடியம் இரு கார்பனேட் தவிர சோடா எனுஞ் சொல் பின்வருவனவற்றையும் குறிக்கும். சோடியம் ஆக்சைடு, சோடியம் அய்டிராக் சைடு (வேதி)

Soda ash - சோடா சாம்பல்: நிறமற்ற சோடியம் கார்பனேட். NaCO3 (வேதி)

soda water - சோடா நீர்: கரி ஈராக்சைடு அழுத்தத்தில் கரைந்த நீர், திறப்பதின் மூலம் அழுத்தத்தை நீக்க, வளியின் கரைதிறன் குறைவதால், நுரை ஏற்படுகிறது. (வேதி)

sodium - சோடியம்: Na. வெள்ளி போன்ற வெண்ணிற உலோகம். சோடியம் குளோரைடு, பொட்டாசியம் குளோரைடு, பொட்டாசியம் புளோரைடு ஆகியவை சேர்ந்த உருகிய கலவையை மின்னாற் பகுப்பதன் மூலம் இப்பொருள் கிடைக்கும். நீருடனும் உப்பீனிகளுடனும் சேர்ந்து, விரைந்து வினையாற்றும் ஒடுக்கி யாகவும் வினையூக்கியாகவும் பயன்படுதல். (வேதி)

sodium aluminate - சோடியம் அலுமினேட்: Na2AI2O4. வெண்ணிறத் திண்மம். நிறம் நிறுத்தி, கண்ணாடி உற்பத்தியிலும் பயன்படுதல். (வேதி)

sodium bicarbonate - சோடியம் இரு கார்பனேட்டு: NaHCO3. ஆப்பச்சோடா. நுரைக்கும் பானங்களில் பயன்படுதல். அமிலநீக்கி. (வேதி)

sodium carbonate - சோடியம் கார்பனேட்டு: Na2CO3. சலவைச் சோடா. வெண்ணிறப் பொருள். சால்வே முறையில் இது உற்பத்தி செய்யப்படுகிறது. எரிசோடா, கண்ணாடி, சவர்க்காரம் முதலியவை செய்யப்பயன்படுவது. (வேதி)