பக்கம்:அறிவியல் அகராதி.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sod

398

soi


தயோசல்பேட்டு: வெண்ணிறத் திண்மம், தூளாக்கிய கந்தகத்தோடு சோடியம் சல்பைடின் கொதி கரைசலைச் சேர்க்க, இப்பொருள் கிடைக்கும். ஒளிப்படத் தொழிலில் நிறம் நிறுத்தி. (வேதி)

sodium vapour lamp - சோடியம் ஆவிவிளக்கு: ஒளிர்வான மின்னேற்றத்தை அளிக்கும் விளக்கு. சோடிய ஆவி குழாயிலுள்ள இரு மின் வாய்களுக்கிடையே குறைந்த அழுத்தத்தில் மின்சாரத்தைச் செலுத்தி, இந்த ஒளிர் வினைப் பெறலாம். வெண்ணிற ஒளியைக் காட்டிலும், மஞ்சள் நிற ஒளி மூடுபனியால் குறைவாக உறிஞ்சப்படுவதால், இது தெரு விளக்குகளில் பயன்படுகிறது. (இய)

soft iron - மென்னிரும்பு: ஆல்பா இரும்பு. குறைந்த ஊடுருவு ஆற்றலும் சார்புநிலையில் நீண்ட அலைநீளமுள்ள அயனியாக்கும் கதிர்வீச்சு (வேதி)

software - மென்னியம்: கணிமம். கணிப்புக்குட்பட்ட நிகழ்ச்சி. கட்டளைகள் அல்லது நிகழ் நிரல்கள் சேமிக்கப்பட்டுக் கணிப் பொறியில் கையாளப்படுதல். எ-டு மென்தட்டு, நிகழ்நிரல். (கணி). ஒ. hardware.

software engineering - மென்னியப் பொறியியல்: கணிமப் பொறியியல். குறிப்பிட்ட வகையில் பயன்படுத்துவதற்காகக் கணிப்பொறி நிகழ்நிரல்களை உருவாக்குதலும் வடிவமைத்தலும் பற்றி ஆராயுந் துறை. (கணி)

softwater - மென்னீர்: சவர்க்காரத்தைச் சேர்க்க உடன் நுரை கொடுக்கும் நீர். கால்சியம் மக்னீசியம் ஆகியவற்றின் இரு கார்பனேட்டு உப்புகள் கரைந்திருப்பதால், தற்காலிகக் கடினத்தன்மை நீருக்கு ஏற்படுகிறது. கொதிக்க வைத்தல் மூலமும் கால்சிய அய்டிராக்சைடைச் சேர்ப்பதன் மூலமும் இதைப் போக்கலாம். நிலைத்த கடினத் தன்மை, கால்சியம், மக்னீசியம் ஆகியவற்றின் குளோரைடு, சல்பேட்டு உப்புகள் நீரில் கரைந்திருப்பதால் ஏற்படுவது. சோடியம் கார்பனேட்டு, பெர்முடிட்டு மூலம் இக்கடினத் தன்மையைப் போக்கலாம். (வேதி) ஒ. hard water.

SOHO - சோகோ: கதிரவன் விண்வெளிக்கலம். ஈசா நாசா ஆகிய இரு வானவெளியமைப்புகளும் சேர்ந்து நிறைவேற்றும் அனைத்துலகக் கூட்டுறவுத் திட்டம். 1995 டிசம்பர் 2இல் ஏவப்பட்டது.

soil - மண்: இது பயிர்கள் வாழத் தகுதியுள்ள புவியின் ஒடு ஆகும். இது இயற்கைத் தேய்வினால் உண்டாவது நீர், காற்று, வெப்பம் முதலிய இயற்கை ஆற்றல்களால் சிதைந்து பாறை மண்ணாவதை இயற்கைத் தேய்வு என்கிறோம். (உயி)

soil aeration - மண் காற்றோட்டம்: