பக்கம்:அறிவியல் அகராதி.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

spa

403

spa


விரைவு 331.3 மீட்டர் வினாடி-1 நீரில் 250 செ.இல் 1498 மீட்டர் வினாடி-1, கண்ணாடியில் 20° செ.இல் 5,000 மீட்டர் வினாடி - 1. (இய)

space - இடம்: பொருள்களை அடைத்துக் கொள்ளும் பகுதி. 2. இடைவெளி: தட்டச்சு, அச்சு 3. வெளி: காற்றுவெளி, திறந்த வெளி, வெற்றுவெளி, வான வெளி (ப.து)

space accord - வானவெளி உடன் பாடு: அமெரிக்காவும் சீனாவும் ஒரு புதிய 7 ஆண்டு ஒப்பந்தத்தை 30.1;95இல் கையெழுத்திட்டுள்ளன. வாணிப அளவில் இதன்படி இருநாடுகளும் வான வெளிக் கலங்களை ஏவும். (வா.அ)

space age - வானவெளிக்காலம்: 1957 ல் உருசியா தன் முதல் புட்னிக்கை ஏவியதிலிருந்து தொடங்கிய காலம். வானவெளி வரலாற்றில் ஒரு பொற்காலம். பல அருஞ்செயல்கள் நடைபெற்ற காலம். அவற்றில் ஒன்று மனிதன் புவியை வலம் வந்ததும் திங்களில் காலடி எடுத்து வைத்ததும் ஆகும். (ப.து)

spaceage materials - வானவெளிக் காலப்பொருள்கள்: இவை கண்ணாடிகளும் வனை பொருள்களும் ஆகும். மின்னணுவியில், ஒளிஇயல் முதலிய துறைகளில் பயன்படுபவை. கரைய இழும முறையில் உருவாக்கப்படுபவை. (வா.அ)

spacecraft - வாணவெளிக்கலம்: புவியையும் திங்களையும் சுற்றி வருவது. சனி முதலிய பிற கோள்களுக்கும் செல்வது, பொதுவாகப் புவியைச் சுற்றி வரும் நிலாக்களில் மனிதன், நாய் முதலிய உயிரிகள் இருக்கும். வானவெளிக் கப்பலும் இதுவே வாஸ்தோக், ஜெமினி, அப்பல்லோ. (ப.து)

space discoveries - வானவெளிக் கண்டுபிடிப்புகள்: 1. வான் ஆலன் கதிர்வீச்சு வளையங்கள் புவியைச் சூழ்ந்துள்ளன. (எக்ஸ்புளோரர் 1) 2. ஞாயிற்றின் கதிர்வீச்சுகள் காற்றுவெளியில் காந்தப்புயல்களையும் முனை ஒளிகளையும் உண்டாக்குகின்றன. 3. திங்களைச் சுற்றிக் கதிர்வீச்சு வளையம் இல்லை, அயனவெளி உண்டு (உலூனிக்) 4. அளந்தறியக்கூடிய கோள் இடைக்காந்தக் களம் உள்ளது. 5. புவி பேரிக்காய் வடிவத்தில் உள்ளது. 6. வான வெளியில் வெப்பநிலை மிகுதியாக இல்லை. 7. மனிதன் வான வெளி நிலைமைகளைத் தாங்கி வான வெளிச் செலவை மேற்கொள்ள இயலும், 8. காற்று வெளியின் மேல் எல்லை 3000 கி.மீ. வரை பரவி உள்ளது. (புட்னிக்) 9. 3500 கி.மீ. உயரத்தில நமக்கு நன்கு பழக்கமான நைட்ரஜன் ஆக்சைடு உள்ளது. 10. அயனிவெளியில் வானொலி அலைகள் செல்வதற்குரிய வழிகள் அமைந்துள்ளன. (ப.து)